டயலொக் ரக்பி லீக் சம்பியனான கண்டி கழகம், க்ளிபர்ட் கிண்ண (Clifford Cup) இறுதிப் போட்டியில் கடற்படை அணியை 21-07 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றதன் மூலம், இலங்கை ரக்பி களத்தில் தாம் சம்பியன் என்பதை மற்றுமொரு முறை நிரூபித்துள்ளனர்.
டயலொக் ரக்பி லீக்கில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற கண்டி அணியானது, இவ்வருடத்தின் இறுதிப் போட்டியாக இப்போட்டியில் கலந்துகொண்டது. கண்டி அணியின் முன்னைய தலைவரான பாசில் மரிஜாவின் இறுதிப் போட்டியாகவும் இது அமைந்தமையால், இப்போட்டி கண்டி அணிக்கு ஒரு முக்கிய போட்டியாக கருதப்பட்டது. பாசில் மரிஜா கண்டி அணியை 15 வருடங்களாக பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
க்ளிபர்ட் கிண்ணத்திலும் அசைக்க முடியாத அணியாக கண்டி விளையாட்டுக் கழகம்
டயலொக் க்ளிபர்ட் கிண்ண ரக்பி தொடரின் (Clifford Cup) முதலாவது அரையிறுதியில் CR&FC அணியினை 38-26 என்ற .
பலம் மிக்க கண்டி அணியானது ஆரம்ப முதலே சிறப்பாக விளையாடி, முதல் ட்ரையை தனுஷ்க ரஞ்சன் மூலமாக வைத்தது. கண்டி அணியின் தலைவரான கயான் வீரரத்ன கொடுத்த பந்தை பயன்படுத்தி தனுஷ்க ரஞ்சன் ட்ரை வைத்தார். எனினும் நைஜல் ரத்வத்த கொன்வெர்சனை தவறவிட்டார். (கண்டி 05 – 00 கடற்படை)
அடுத்த 30 நிமிடங்களுக்கு இரு அணிகளும் சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டு அணிகளும் அதிகமாக பந்தை நழுவவிட்டதை காணக்கூடியதாக இருந்தது. தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட கண்டி கழகம், நைஜல் ரத்வத்த மூலமாக 3 புள்ளிகளை உறுதி செய்துகொண்டது. கடற்படை அணிக்கு முதல் பாதியில் வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை சரிவர பயன்படுத்த கடற்படை அணி தவறியது.
முதல் பாதி: கண்டி விளையாட்டுக் கழகம் 08 – 00 கடற்படை விளையாட்டுக் கழகம்
இரண்டாம் பாதியில் கடற்படை அணி புள்ளிகளை ஆரம்பித்து வைத்தது. மரிஜாவின் கையிலிருந்து நழுவிய பந்தை பெற்றுக்கொண்ட மொகமட் அப்சல், 60 மீட்டர் தூரத்தை வேகமாக ஒடி கம்பத்தின் அடியில் வைத்தார். திலின வீரசிங்க கொன்வெர்சனை தவறவிடவில்லை. (கண்டி 08 – 07 கடற்படை)
மீண்டும் ஒரு முறை சிறப்பாக செயற்பட்ட கயான் வீரத்தன, பந்தை தனுஷ்க ரஞ்சனிற்கு கொடுக்க, தனுஷ்க ரஞ்சன் இரண்டாம் பாதியில் கண்டி அணி சார்பாக முதலாவது ட்ரை வைத்தார். விஜேசிங்க கொன்வெர்சனை தவறவிட்டு ஏமாற்றம் அளித்தார். (கண்டி 13 – 07 கடற்படை)
கம்பத்திற்கு நேராக பெனால்டி வாய்ப்பை கண்டி அணி பெற்றது. இம்முறை விஜேசிங்க தவறவிடாது கம்பத்தின் நடுவே உதைத்து, 3 புள்ளிகளை கண்டி அணிக்கு பெற்றுக்கொடுத்தார். (கண்டி 16 – 07 கடற்படை)
நட்சத்திர வீரர் பாசில் மரிஜா தனது அனுபவத்தை பயன்படுத்தி பெனால்டியை விரைவாக எடுத்து குறுக்கே உதைக்க, அப்பந்தைப் பெற்றுக்கொண்ட ஷெஹான் பதிரன, ட்ரை கோட்டைக் கடந்து கண்டி அணியின் க்ளிபர்ட் கிண்ண கனவை உறுதி செய்தார். (கண்டி 21-07 கடற்படை)
கடற்படையை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற திலின வீரசிங்க
டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் க்ளிபர்ட் கிண்ண (Clifford Cup) ரக்பி தொடரின்
இதன் மூலம் கண்டி அணி தமது 21 ஆவது க்ளிபர்ட் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது. இவ்வருடத்தில் எந்த ஒரு போட்டியிலும் தோற்காத கண்டி அணி, பாசில் மரிஜாவிற்கு ஒரு சிறந்த பிரியாவிடையைய் பரிசாக வழங்கியது எனலாம். கண்டி அணியின் வெற்றிக்கு அவர்களது தலைவரான கயான் வீரரத்னவின் பங்கு அளப்பரியது. அணியை முன் நின்று வழிநடாத்திய கயான், சிறப்பாக விளையாடி பல ட்ரைகளை வைக்க காரணமாக அமைந்தார்.
முழு நேரம்: கண்டி விளையாட்டுக் கழகம் (3T, 2P) 21 – 07 (1T,1C)
கடற்படை விளையாட்டுக் கழகம்
புள்ளிகள் பெற்றோர்
கண்டி விளையாட்டுக் கழகம் – தனுஷ்க ரஞ்சன் (2T), ஷெஹான் பதிரன (1T), நைஜல் ரத்வத்த (1P), திலின விஜேசிங்க (1P)
கடற்படை விளையாட்டுக் கழகம் – மொகமட் அப்சல் (1T), திலின வீரசிங்க (1C)