மார்ச் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள சிட்டி காற்பந்தாட்ட லீக் ஜனாதிபதி கிண்ணத்திற்கான போட்டி தொடரில் 6 காற்பந்தாட்ட அணிகள் பங்குகொள்ளவுள்ளன.
டயலொக் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை சுவீகரித்த கொழும்பு காற்பந்தாட்ட கழகம், இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட ரினோன் கழகம், ஜாவா லேன் கழகம், சௌண்டர்ஸ் கழகம், மொரகஸ்முள்ள கழகம் மற்றும் குரே கழகம் ஆகிய கழகங்கள் இப்போட்டித் தொடரில் கலந்து சிறப்பிக்கவுள்ளன.
சென்ற வருடம் கனத்த மழையின் நடுவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொழும்பு மற்றும் ரினோன் கழகங்கள் மோதிக்கொண்டன. போட்டி 1-1 என்ற நிலையில் சமநிலையில் முடிவுற்றதன் காரணமாக, இரண்டு அணிகளும் சம்பியன் கிண்ணத்தை பகிர்ந்துகொண்டன.
ரினோன், ஜாவா லேன் மற்றும் குரே கழகங்கள் A குழுவில் இடம்பெற்றுள்ளதுடன், கொழும்பு, சௌண்டர்ஸ் மற்றும் மொரஸ்கஸ்முல்ல ஆகிய கழகங்கள் B குழுவில் இடம்பெற்றுள்ளன.
வெற்றியாளர்களுக்கு வெற்றிப் பரிசாக 150,000 ரூபாயும், இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 100,000 ரூபாயும் வழங்கப்படவுள்ளது சிறப்பம்சமாகும்.
போட்டி நேர அட்டவணை
குழு மட்ட போட்டிகள்
- 11 மார்ச் – ரினோன் கழகம் எதிர் ஜாவா லேன் – பி.ப 3.45
- 12 மார்ச் – கொழும்பு காற்பந்தாட்ட கழகம் எதிர் மொரகஸ்முள்ள கழகம் – பி.ப 3.45
- 18 மார்ச் – சௌண்டர்ஸ் கழகம் எதிர் மொரகஸ்முள்ள கழகம் – பி.ப 3.45
- 19 மார்ச் – ஜாவா லேன் எதிர் குரே கழகம்- 3.45 பி.ப
- 25 மார்ச் – ரினோன் கழகம் எதிர் குரே கழகம் – பி.ப 3.45
- 26 மார்ச்- சௌண்டர்ஸ் கழகம் எதிர் கொழும்பு காற்பந்தாட்ட கழகம்- பி.ப 3.45
அரையிறுதி
- 1 ஏப்ரல் – குழு A முதலிடம் எதிர் குழு B இரண்டாம் இடம்
- 2 ஏப்ரல் – குழு B முதலிடம் மற்றும் குழு A இரண்டாம் இடம்
இறுதி போட்டி
- 9 ஏப்ரல் – அரையிறுதி 1 வெற்றியாளர்கள் எதிர் அரையிறுதி 2 வெற்றியாளர்கள்