சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் பிரிவு 3 (டிவிஷன் – III) பாடசாலைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிக்கான அணிகளைத் தெரிவு செய்யும் ஆட்டமொன்றில் (Pre-Quarter Finals) ஜா-எல கிறிஸ்துவரசர் கல்லூரியினை யாழ். மத்திய கல்லூரி 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, காலிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருக்கின்றது.
ஐ.சி.சி T-20 தரவரிசையில் இலங்கை, இந்திய வீரர்கள் முன்னேற்றம்
கடைசி இரண்டு ஓவர்களிலும் தனது துடுப்பாட்டத்தால் சாகசம் நிகழ்த்திய தினேஷ்
தீர்மானமிக்க 50 ஓவர்களினைக் கொண்ட இந்தப் போட்டியானது இன்று (21) யாழ். மத்திய கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கிறிஸ்துவரசர் கல்லூரியின் தலைவர் தனன்ஞய பெர்னாந்து முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.
இதனையடுத்து யாழ்ப்பாண மத்திய கல்லூரிக்கு விருந்தினர்களாக வந்திருந்த கிறிஸ்துவரசர் கல்லூரி அணியினர் தமது துடுப்பாட்டத்தை சந்தருவன் சில்வா மற்றும் தரக்க அப்புஹாமி ஆகியோருடன் தொடங்கினர்.
யாழ்.மத்திய கல்லூரியின் S. மதுசனின் அதிரடிப் பந்துவீச்சின் காரணமாக ஜா-எல தொடக்க வீரர்களுக்கு எதிர்பார்த்த ஆரம்பத்தினை பெற முடியாது போயிருந்தது. மதுசன் ஆரம்ப வீரர்கள் இருவரின் விக்கெட்டுக்களையும் கைப்பற்ற அவர்கள் மிகவும் குறைவான ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தனர்.
தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்களும் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான மதுசனை சமாளிக்க சிரமப்பட்டு வந்தகதியிலேயே, மைதானத்தினை விட்டு வெளியேறினர். மதுசனுக்கு S. சுஜனும், K. இயலரசனும் பந்துவீச்சில் கைகொடுக்க கிறிஸ்துவரசர் கல்லூரியின் நிலை மிகவும் பரிதாபகரமானது. இந்த தருணத்தில் கிறிஸ்துவரசர் வீரர்கள் 47 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தனர்.
இப்படியானதொரு இக்கட்டான நிலையில் 7 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரரான நிசல் மாலிங்கவும், 10 ஆம் இலக்கத்தில் ஆடும் மலித் நகஞ்சனவுமே களத்தில் நின்றனர்.
அரைச்சதம் கடந்த அபினாஷ், தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்த சென் ஜோன்ஸ்
சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும்
இரண்டு வீரர்களும் தமது அணியின் மோசமான நிலையறிந்து மிகவும் பொறுமையான முறையில் ஆட, அணி சரிவு நிலையில் இருந்து படிப்படியாக மீளத் தொடங்கியது. இதில், நகஞ்சன அரைச்சதம் தாண்டினார். அதோடு மாலிங்கவும் பெறுமதி மிக்க 42 ஓட்டங்களினை அணிக்குச் சேர்த்தார்.
இருவரினதும் போராட்டத்தினால் கிறிஸ்துவரசர் கல்லூரியின் 9ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக பிரமிக்கும் வகையில் 115 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தது. இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடு 45 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த ஜா-எல கிறிஸ்துவரசர் கல்லூரி 165 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.
கிறிஸ்ட் கிங் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் 9 பெளண்டரிகள் அடங்கலாக மலித் நகஞ்சன 110 பந்துகளினை எதிர்கொண்டு 71 ஓட்டங்களினைக் குவித்து சிறப்பாக செயற்பட்டிருந்தார்.
இதேவேளை மைதானச் சொந்தக்காரர்களான யாழ்.மத்திய கல்லூரியின் பந்துவீச்சில் மதுசன் 51 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுக்களையும், சுஜன் மற்றும் இயலரசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
முதல் இன்னிங்ஸ் வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்த திரித்துவக் கல்லூரி
சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெற்றவரும் 19 வயதுக்குட்பட்ட … பின்னர் முதல் நாள் ஆட்ட நிறைவு நேரத்தில் தமது முதல்
இதனையடுத்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 166 ஓட்டங்களினைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய யாழ்.மத்திய கல்லூரி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்திருந்தது.
இதன் காரணமாக ஒரு கட்டத்தில் போட்டி தீர்க்கமான ஒரு நிலைக்கும் சென்றது. எனினும் S. கெளதமன், இயலரசன் ஆகியோரின் துடுப்பாட்ட உதவியோடு 34.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்த யாழ் மத்திய கல்லூரி வீரர்கள் 169 ஓட்டங்களைப் பெற்று போட்டியின் வெற்றியாளர்களாக மாறினர்.
யாழ். மத்திய கல்லூரியின் துடுப்பாட்டத்தில் வெறும் 40 பந்துகளினை மாத்திரம் எதிர் கொண்ட கெளதமன் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களினைப் பெற்று ஆட்டமிழக்காமல் நின்றிருந்ததோடு, ஏற்கனவே பந்துவீச்சில் நல்ல முறையில் செயற்பட்ட இயலரசன் 36 ஓட்டங்களினைக் பெற்று தனது தரப்பின் வெற்றியினை ஊர்ஜிதம் செய்திருந்தார்.
கிறிஸ்துவரசர் கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக சுழல் வீரரான தெமிந்த கொலம்பகமகே 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
கிறிஸ்துவரசர் கல்லூரி – 165 (45) மலித் நகஞ்சன 71, நிசால் மலிங்க 42, S. மதுசன் 51/5, K. இயலரசன் 19/2, S. சுஜன் 36/2
யாழ். மத்திய கல்லூரி – 169/6 (34.5) S. கெளதமன் 50*, K. இயலரசன் 36, தெமிந்த கொலம்பகமகே 35/2
முடிவு – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 4 விக்கெட்டுக்களால் வெற்றி