டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் இணையும் என்ரிச் நோட்ஜே

213

இந்திய ப்ரீமியர் லீக்கில் (IPL) டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காக இணைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் க்ரிஸ் வோர்க்ஸிற்கு பதிலாக, தென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் என்ரிச் நோட்ஜே இணைக்கப்பட்டுள்ளார்.

டோனியின் தலைவர் பதவியை காப்பாற்றிய ஸ்ரீனிவாசன்

க்ரிஸ் வோர்க்ஸ் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற காரணத்தால், ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதுமாத்திரமின்றி, கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு பின்னரான போட்டி அட்டவணையும் இவர் டெல்லி அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான மற்றுமொரு காரணமாக அமைந்தது.

என்ரிச் நோட்ஜே கடந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இணைக்கப்பட்டிருந்த போதும், தோற்பட்டை உபாதை காரணமாக தன்னுடைய கன்னி ஐ.பி.எல். தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தார். அதேநேரம், பெருவிரல் உபாதை காரணமாக உலகக் கிண்ணத் தொடரிலிருந்தும் வெளியேறியிருந்தார்.

என்ரிச் நோட்ஜே டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் 

“கடந்த பருவகாலத்தில் பேசப்பட்ட அணியான  டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் விளையாடுவது குறித்து உற்சாகமடைகிறேன். அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் குறைந்த அனுபவம் கொண்ட வீரர்கள் என சிறந்த கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், முன்னணி பயிற்றுவிப்பாளர்கள் குழாமும் டெல்லி அணியில் உள்ளது. எனவே, சந்தேகமின்றி நான் கற்றுக்கொள்வதற்கான சிறந்த தருணமாக இந்த தொடர் அமையும். அதேவேளை, தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கியுள்ள டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

டோனியை பின்பற்றி ஓய்வை அறிவித்தார் சுரேஸ் ரெய்னா

என்ரிச் நோட்ஜே தென்னாபிரிக்க அணிக்காக கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமாகியதுடன், 6 டெஸ்ட் போட்டிகளில் அந்த அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் ஏற்கனவே, காகிஸோ ரபாடா இணைக்கப்பட்டுள்ளதுடன், அந்த அணியில் இடம்பெறும் இரண்டாவது தென்னாபிரிக்க வீரராக நோட்ஜே மாறியுள்ளார். இவர்கள், இருவரும் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடருக்காக பயணிக்கவுள்ளனர்.

இந்தியாவில் அச்சுறுத்திவரும் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக, ஐ.பி.எல். தொடர் அடுத்த மாதம் 19ம் திகதி முதல் நவம்பர் 10ம் திகதிவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க