இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் பதவியை இராஜினமா செய்த கிறிஸ் சில்வர்வூட்

Sri Lanka Cricket – Coaching Staff

150
Chris Silverwood Resigns

இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் பதவியை இராஜினமா செய்த கிறிஸ் சில்வர்வூட்.

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த கிறிஸ் சில்வர்வூட் தனது பதவியினை இராஜினமா செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

அதன்படி இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கிறிஸ் சில்வர்வூட் தனது சொந்தக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தனது பதவியினை இராஜினமா செய்திருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது 

>> கோல் மார்வல்ஸ் அணியின் தலைவராகும் திக்வெல்ல

கிறிஸ் சில்வர்வூட் தனது குடும்பத்தினருடன் நேரத்தினை செலவு செய்யும் நோக்கில் காணப்படுவதாக குறிப்பிட்டே பதவி இராஜினமா செய்திருக்கின்றார் 

எனினும் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த மஹேல ஜயவர்தன நேற்று (26) பதவி விலகிய நிலையிலையே கிறிஸ் சில்வர்வூடின் பதவி விலகலும் இடம்பெற்றிருக்கின்றது 

அதாவது இலங்கை கிரிக்கெட் அணி 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் மற்றும் 2022 T20 உலகக் கிண்ணத் தொடர் என்பவற்றில் மோசமாக செயற்பட்டதனை அடுத்த இரண்டு பயிற்சியாளர்களும் பதவி விலகிய நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

எனினும் கிறிஸ் சில்வர்வூடின் ஆளுகையிலான இலங்கை அணி 2022ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடரினை கைப்பற்றியதோடு, அதன் பின்னர் 2023ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியிருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும் 

அத்துடன் இலங்கை சில்வர்வூடின் ஆளுகையில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரில் வெற்றி பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<