இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் க்ரிஸ் சில்வர்வூட் நியமிக்கப்பட்டுள்ளார் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை இன்று (7) அறிவித்துள்ளது.
நடைபெற்று முடிந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருடன் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ட்ரெவர் பெய்லிஸ் விலகியிருந்தார். இதனையடுத்து, அவரின் இடத்துக்கு புதிய பயிற்றுவிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை இங்கிலாந்து கிரிக்கெட் சபை மேற்கொண்டிருந்தது.
மஹேலவின் அணியில் விளையாடவுள்ள ஜொப்ரா ஆர்ச்சர்
இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) அடுத்த ஆண்டு நடாத்தவுள்ள….
இதன் அடிப்படையில் தலைமை பயிற்றுவிப்பாளர்களுக்கான தேர்வுகள் நடைபெற்றிருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த க்ரிஸ் சில்வர்வூட் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொம் ஹெரிசன், ஆடவர் அணிக்கான முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்லி கிலெஸ் மற்றும் பயிற்றுவிப்பாளர் மேம்பாட்டு திணைக்களத்தின் தலைமை அதிகாரி ஜோன் நீல் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு க்ரிஸ் சில்வர்வூட்டினை தலைமை பயிற்றுவிப்பாளராக ஏகமனதாக தெரிவுசெய்துள்ளது.
க்ரிஸ் சில்வர்வூட்டின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி குறித்து இங்கிலாந்து ஆடவர் அணிக்கான முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்லி கிலெஸ் குறிப்பிடுகையில்,
“இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக க்ரிஸ் சில்வர்வூட் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எமது அணியை சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு அவர் ஒரு சிறந்த நபராக இருப்பார். அத்துடன், எமது அணியின் கட்டமைப்பு மற்றும் அமைப்பினை நன்கு அறிந்தவர். அதுமாத்திரமின்றி, எமது அணித்தலைவர்களான ஜோ ரூட் மற்றும் இயன் மோர்கன் ஆகியோருடன் நெருங்கியிருப்பவர். அதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் எமது அணியை முன்னோக்கி அழைத்துச் செல்ல அவர் உதவுவார்” என்றார்.
இளம் வீரர்களின் பிரகாசிப்பால் பறிபோகுமா முன்னணி வீரர்களின் வாய்ப்பு? Cricket Kalam 32
இலங்கை அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம், பாகிஸ்தானுக்கு….
அதேநேரம், தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி குறித்து க்ரிஸ் சில்வர்வூட் குறிப்பிடுகையில்,
“கடந்த 5 வருடங்களாக இங்கிலாந்து அணி எவ்வாறு சிறந்த முன்னேற்றத்தை அடைந்திருந்ததோ, அதனை அப்படியே நகர்த்துவது எனது எண்ணம். முக்கியமாக டெஸ்ட் போட்டிகளின் அதிக முன்னேற்றத்தை பெறவேண்டும். கடந்த இரண்டு பருவகாலங்களாக இங்கிலாந்து வீரர்களுடன் பணியாற்றியமையும், திறமையான வீரர்களை உருவாக்கியதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.
எமது அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். தற்போது கடின உழைப்பு ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க தொடர்களில் சிறந்த பெறுபேற்றை பெறமுடியும் என நம்புகிறேன்” என்றார்.
க்ரிஸ் சில்வர்வூட் 1996 முதல் 2002ம் ஆண்டுவரை இங்கிலாந்து அணிக்காக 6 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனாலும், உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடிய விதம் மற்றும் பயிற்றுவித்த விதமே அவர் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு காரணமாகியுள்ளது.
இங்கிலாந்து அணியானது எதிர்வரும் நவம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரானது, தலைமை பயிற்றவிப்பாளராக க்ரிஸ் சில்வர்வூட்டின் முதல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க