இலங்கை அணியுடன் இணையும் கிரிஸ் கிலார்க்-அயர்ன்ஸ்

Sri Lanka Cricket

285

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை உடல் சிகிச்சை நிபுணராக இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிஸ் கிலார்க்-அயர்ன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிலார்க்-அயர்ன்ஸ் உடல் சிகிச்சை நிபுணருக்கான பட்டப்படிப்பினை இங்கிலாந்தின் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்துள்ளதுடன், எம்.எஸ்.சி. பட்டப்படிப்பினையும் இங்கிலாந்தின் கிங்ஸ் கல்லூரியில் நிறைவுசெய்துள்ளார்.

>>  இலங்கையின் முன்னேற்ற பாதையை ஆரம்பித்த 2022ம் ஆண்டு!

கிரிஸ் கிலார்க்-அயர்ன்ஸ் இதற்கு முன்னர் இங்கிலாந்தின் எசெக்ஸ் கவுண்டி அணியின் விஞ்ஞானம், வைத்தியம் மற்றும் உடல் சிகிச்சை பிரவுகளின் தலைமை பதவியை வகித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிரிஸ் கிலார்க்-அயர்ன்ஸ் இந்தியாவுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பிக்கவுள்ள தொடரில் தன்னுடைய பணியை ஆரம்பிக்கவுள்ளதுடன், இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று T20I மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான தொடர் செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பமாகவுள்ளது. T20I தொடர் இம்மாதம் 3ம் திகதி முதல் 7ம் திகதிவரை ஆரம்பமாகவுள்ளதுடன், ஒருநாள் தொடர் 10ம் திகதி முதல் 15ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<