பும்ராவுக்கு வசீம் அக்ரமின் அறிவுரை

137
Akrams advice to Bumrah

இந்திய கிரிக்கெட் அணியின் ஜஸ்பிரிட் பும்ரா போன்ற இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் தமக்கு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இடைவெளி கிடைக்கும் சந்தர்ப்பங்களில், இங்கிலாந்தின் கௌன்டி போன்ற கிரிக்கெட் தொடர்களில் விளையாடாமல் ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்  பந்துவீச்சாளரான வசீம் அக்ரம் தெரிவித்திருக்கின்றார். 

சர்ரே கழகத்தின் அதிசிறந்த வெளிநாட்டு வீரராக சங்கக்கார தெரிவு

இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் அணியான சர்ரே பிராந்திய அணியின் அதிசிறந்த…

கௌன்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி மிகப் பெரிய அனுபவத்தினைக் கொண்டிருக்கம் வசீம் அக்ரம், தனது அனுபவத்தின் வெளிப்பாடாகவே பும்ரா போன்ற வீரர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கின்றார். 

”இந்தியாவின் வீரர்கள் வருடம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்றனர். தற்போது இந்திய அணியின் முதல்நிலை பந்துவீச்சாளராக உள்ள பும்ரா உலகில் இருக்கும் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் காணப்படுகின்றார். எனவே, நான் அவருக்கு (சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நிலையில்) ஓய்வு எடுக்குமாறு அறிவுரை வழங்கியிருப்பேன்.”

”நான் முதலில் வருடம் ஒன்றுக்கு பாகிஸ்தான் அணிக்கு ஆறு மாதங்களுக்கும், (கௌன்டி அணியான) லங்கஷையர் அணிக்கு ஆறு மாதங்களுக்கும் விளையாடியிருந்தேன். என்னைப் பொறுத்தவரை இன்று இது நேர அடிப்படையில் மிகவும் கடினமான விடயமாக இருக்கும்.”   என்றார்.  

IPL போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு இராட்சியம் கோரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள 13ஆவது இந்தியன்…

இன்னும் தனது கருத்தினைப் பதிவு செய்த வசீம் அக்ரம், இப்போது உள்ள பந்துவீச்சாளர்களின் திறமை T20 போட்டிகளினை விட டெஸ்ட் போன்ற அதிக ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளின் மூலமே மதிப்பிடப்பட வேண்டும் எனக் கூறி இப்போது இருக்கும் பந்துவீச்சாளர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள முதல்தரப் போட்டிகளில் விளையாட அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். 

”நான் அவர்களின் (வேகப் பந்துவீச்சாளர்கள்) திறமையினை T20 போட்டிகள் மூலம் மதிப்பிட மாட்டேன். இதனை நான் அவர்கள் அதிக ஓவர்கள் கொண்ட போட்டிகளில் எப்படி செயற்படுகின்றார்கள் என்பதை வைத்தே மதிப்பிடுவேன்.” 

”(இதேநேரம்) தங்களது திறமைகளை மெருகேற்றிக் கொள்ள அவர்கள், அதாவது வேகப் பந்துவீச்சாளர்கள் அதிக முதல்தரப் போட்டிகளில் விளையாட வேண்டும்.” என வசீம் அக்ரம் சுட்டிக் காட்டினார். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<