சிட்டகொங் ஆடுகளத்தை சராசரியை விட குறைவாக தரப்படுத்தியது ICC

442
© AFP

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான அதிக ஓட்டங்கள் பெறப்பட்டு, சமநிலையில் முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற சிட்டகொங் ஆடுகளம் ‘சராசரிக்கும் குறைந்தது’ என ICC போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூன் தரப்படுத்தியுள்ளார்.

[rev_slider LOLC]

இதன் காரணமாக இந்த ஆடுகளம் ஒரு குறைபாட்டு புள்ளியை பெற்றிருப்பதாக ICC ஆடுகளம் மற்றும் வெளிப்புற மைதான கண்காணிப்பு செயற்பாடு குறிப்பிடுகிறது. இந்த நிலை தொடர்ந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு நீடிக்கும். இந்த காலப்பிரிவில் இந்த மைதானம் மேலும் நான்கு குறைபாட்டு புள்ளியை பெற்றால் குறித்த மைதானத்தில் 12 மாதங்களுக்கு சர்வதேச போட்டிகளை நடத்துவது இடைநிறுத்தப்பட முடியும்.

முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி முதலாவது இன்னிங்சுக்காக 513 ஓட்டங்களை பெற்றதோடு இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 713 என்ற இமாலய ஓட்டங்களை எடுத்து பதில் கொடுத்தது. ஆடுகளம் இரண்டாவது இன்னிங்சிலும் கூட மாற்றமடையவில்லை. இறுதி நாளில் போட்டி சமநிலையில் முடிவுக்கு வரும் முன்னர் பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 307 ஓட்டங்களைப் பெற்றது.    

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையில் நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட்

இந்த ஆடுகளத்தை பலரும் விமர்சித்ததோடு, இது டெஸ்ட் போட்டிக்கு பொருத்தமற்றது என்று இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன குறிப்பிட்டிருந்தார்.

“புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் எந்த செயற்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை. அதேபோன்று போட்டி முழுவதும் பந்து மேலெழாமலும் செயற்படாமலும் இருந்தது” என்று பூன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். “ஆடுகளம் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு அவ்வப்போது மெதுவான சுழற்சி தந்தது ஆனால் போட்டியின் முன்னேற்றத்திற்கு எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை. இதனால் ஐந்து நாட்களிலும் ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக சாதகமாக இருந்தது” என்றும் பூன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.