கொவிட்-19 வைரஸ் அச்ச நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கால்பந்து தொடரினை (AFC Asian Cup) நடாத்துவதில் இருந்து தம்மை விடுவித்திருப்பதாக சீனா தெரிவித்திருக்கின்றது.
>>இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்கள்
சீனா தமது நாட்டில் ஆசிய கிண்ண கால்பந்து தொடரினை நடாத்துவதில் இருந்து விலகியிருக்கும் விடயத்தினை ஆசிய கால்பந்து சம்மேளனம் (AFC) உறுதிப்படுத்தியிருக்கின்றது.
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசியக் கிண்ண கால்பந்து தொடரானது, அடுத்த ஆண்டு (அதாவது 2023 இல்) ஜூன் மாதம் 16ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 17ஆம வரை சீனாவில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்னர் குறிப்பிட்டதனை போன்று, கொவிட்-19 வைரஸ் சீனாவில் மீண்டும் உருவாக்கியிருக்கும் அச்ச நிலைமைகளை கருத்திற்கொண்டு ஆசியக் கிண்ண கால்பந்து தொடரினை அங்கே நடாத்த முடியாது என சீனா கால்பந்து சம்மேளனம் (CFA) குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
>>சம்பியன்ஷ் லீக், தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர்கள் ஒத்திவைப்பு
அதேநேரம் ஆசியக் கால்பந்து சம்மேளனம், 2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கால்பந்து தொடரினை நடாத்துவது தொடர்பில் விரைவில் அறிவிக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றது.
இதேநேரம் சீனாவில் நடைபெறவிருந்த போர்மூலா வன் கிராண்ட் பிரிக்ஸ், சர்வதேச டென்னிஸ் தொடர்கள் போன்ற ஏனைய விளையாட்டு நிகழ்வுகளும் கொவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக அங்கே இதுவரை நடாத்தப்படாமல் இருக்கின்றமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<