சீனாவில் நிர்மானிப்படும் தாமரைப் பூ வடிவிலான கால்பந்து அரங்கு

243

சீனாவில் கொரோனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் குறைந்து வருகின்ற இத்தருணத்தில் உலகின் மிகப் பெரிய கால்பந்து அரங்கமொன்றை நிர்மானிப்பதற்கான வேலைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் முன்னெடுத்துள்ளது.  

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 இலட்சம் மக்கள் உயிரிழந்துவிட்டனர்

“கேம்ப் நௌ” பெயரை விற்கும் பார்சிலோனா

ஸ்பெயினின் தலைசிறந்த கால்பந்து கழகமான பார்சிலோனா….

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையான போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டும், இரத்து செய்யப்பட்டும் உள்ளன. இனிமேல் விளையாட்டுப் போட்டிகள் எப்போது தொடங்கும் என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாத நிலை உள்ளது.  

இந்த நிலையில், கொரோனாவினால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் சகஜ நிலையை எட்டும் காலத்தை எதிர்நோக்கி இருக்கின்றன. எனினும், மருத்துவ வல்லூனர்கள், உலக சுகாதார மையம் இந்த தொற்று முற்றிலும் ஒழிய நீண்ட நாட்கள் ஆகும் எனத் தெரிவித்துள்ளன

இந்த நிலையில், சீனாவில் உள்ள கால்பந்து கழகமொன்று உலகின் மிகப் பெரிய கால்பந்து அரங்கமொன்றை நிர்மானிப்பதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளது. 

இதன்படி, சீனாவின் ஷென்குவா பகுதியில் நிர்மானிக்கப்படுகின்ற இந்த அரங்கிற்காக 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (12 பில்லியன் யுவான்) செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   

அத்துடன், தாமரைப் பூவை ஒத்த வடிவில் உருவாகும் குறித்த மைதானத்தின் நிர்மானப் பணிகள் எதிர்வரும் 2022இல் பூர்த்தியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதேநேரம், குறித்த மைதானத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை கண்டுகளிப்பதற்கான வசதிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இது உலகின் மிகப் பெரிய மைதானங்களில் ஒன்றாக இடம்பிடிக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதேவேளை, குறித்த மைதானத்தில் கட்டுமானப் பணிகள் கடந்த வியாழக்கிழமை சீன கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

சீனாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரால் நிறுவப்பட்ட எவர்கிராண்ட் குழுமம், இந்த மைதானத்தை நிர்மானிக்க முன்வந்துள்ள அதேநேரம், சீனாவில் மேலும் 80,000 இருக்கைகள் கொண்ட இரண்டு மைதானங்களை உருவாக்க உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

இதன்படி, 2030 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் 12 மிகப் பெரிய புதிய கால்பந்து மைதானங்கள் சீனாவில் நிர்மானிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

பிரமாண்டமாக புனரமைக்கப்படும் ரியல் மெட்ரிட் அரங்கு

புனரைக்கப்பட்டு வரும் ரியல் மெட்ரிட் கழகத்தின் Santiago…..

இதுஇவ்வாறிருக்க, புதிதாக நிர்மானிக்கப்பட்ட மைதானங்கள் சீனாவில் நடைபெறவுள்ள 2021 கழகங்களுக்கிடையிலான உலகக் கிண்ணம் மற்றும் 2023 ஏ.எப்.சி ஆசிய கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர்களுக்காக பயன்படுத்தப்படும் என அந்நாட்டு கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது

இதன்படி, 2030 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்காக விண்ணப்பிக்க சீனாவின் விருப்பம் மிகவும் தெளிவாக உள்ளது என்று சீனாவின் முன்னணி பத்திரிகை நிறுவனமான ஓரியண்டல் ஸ்போர்ட்ஸ் டெய்லி பத்திரிகையாளர் ஜி யுயாங் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் பிஃபாவின் தலைவர் ஜியானி இன்பான்டினோ 2030 உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கான சீனாவின் முயற்சியை வரவேற்கிறேன் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<