45ஆவது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டினா 4-0 என்ற கோல்கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.
2ஆவது அரை இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் சிலி – கொலம்பியா அணிகள் மோதின.
இதில் சிலி அணி 2-0 என்ற கோல்கணக்கில் கொலம்பியாவை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்தில் சிலி முதல் கோலை அடித்தது. சார்லஸ் அரன்குயிங் இந்த கோலை அடித்தார். 11ஆவது நிமிடத்தில் சிலி வீரர் ஜோஸ் பெட்ரோ 2ஆவது கோலை அடித்தார். ஆட்டம் இறுதி வரை கொலம்பிய அணியால் பதில் கோல் போட முடியாமல் போனது பரிதாபமே.
ஸ்பெயினைத் தோற்கடித்து; அடுத்த சுற்றில் குரோஷியா
சிலி அணி 5ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. அந்த அணி இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினாவைச் சந்திக்கிறது. இந்த ஆட்டம் 27ஆம் திகதி நடக்கிறது.
கடந்த ஆண்டு கோபா அமெரிக்க இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளுமே மோதின. இதில் சிலி அணி வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. தற்போது இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மீண்டும் மோதுகின்றன.
3ஆவது இடத்துக்கான ஆட்டம் 26ஆம் திகதி நடக்கிறது. இதில் கொலம்பியா – அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்