இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் பிளே-ஓஃப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள மைதானங்கள் தொடர்பிலான அறிவிப்புகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
IPL லீக் போட்டிகளுக்கான மைதானங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிளே-ஓஃப் மற்றும் இறுதிப்போட்டிக்கான மைதானங்கள் அறிவிக்கப்படவில்லை.
>> அயர்லாந்து அணியுடன் இணைந்த போல் ஸ்டைர்லிங்!
இந்தநிலையில் பிளே-ஓஃப் சுற்றின் முதல் குவாலிபையர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முறையே 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து 26ம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது குவாலிபையர் போட்டி அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளதுடன், கடந்த ஆண்டு போன்று மே 28ம் திகதி IPL இறுதிப்போட்டியும் அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2019ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக IPL பிளெ-ஓஃப் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<