இங்கிலாந்து மகளிர் கிரிக்கட் அணியின் தலைவர் சார்லொட் எட்வர்ட்ஸ் சர்வதேசக் கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு இங்கிலாந்து மகளிர் கிரிக்கட் அணியில் அறிமுகமான சார்லலொட் எட்வர்ட்ஸ் கடந்த 10 ஆண்டுகளாக இங்கிலாந்து மகளிர் கிரிக்கட் அணியை வழிநடத்தியுள்ளார்.
அவரது தலைமையில் இங்கிலாந்து அணி 2009ஆம் ஆண்டில் ஒருநாள் மற்றும் டி20 உலகக் கிண்ணத்தை வென்றிருந்தது . 36 வயதான சார்லொட் 23 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 95 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.
கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்று முடிவடைந்த டி20 உலகக் கிண்ண போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி அரை இறுதியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு வெளியேறியது. அணி வீராங்கனைகள் போதிய உடல் தகுதியுடன் இல்லாததே தோல்விக்கு காரணம் என்று பயிற்சியாளர் மார்க் ரொபின்சன் விமர்சித்து இருந்தார். பயிற்சியாளரின் இந்த விமர்சனத்தைத் தொடர்ந்தே சார்லொட் விலகல் முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
சர்வதேச கிரிக்கட்டில் இருந்து தான் ஓய்வு பெற்றாலும் உள்ளூர் மற்றும் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று சார்லோட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்