இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் விரைவில் அதிரடி மாற்றங்கள்

269

இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகம் மற்றும் யாப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டள்ளது. பிரதான 3 காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1973ஆம் ஆண்டின் 25ஆவது சட்டத்திற்கு அமைய இலங்கை கிரிக்கெட்டின் யாப்பினை திருத்தியமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கிலும், புதிய பொதுச் செயலாளர் ஒருவரை நியமிப்பதற்காகவும் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

வரலாறு படைக்க எமக்கு சிறந்த வாய்ப்பு – திசர பெரேரா

இலங்கை அணி எந்த திசையில் பயணிக்கப்போகிறது என்பதை பொறுப்பேற்கவிருக்கும்..

இதேவேளை, ஜயந்த தர்மதாச உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து பொதுச் செயலாளராகக் கடமையாற்றிய மொஹான் டி சில்வா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டுத்துறைக்கு பொறுப்பாக அவர் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக சபையின் உதவித் தலைவராகச் செயற்பட்ட ஜயந்த தர்மதாச, அடுத்தடுத்து நடைபெற்ற செயற்குழுக் கூட்டங்களை புறக்கணித்து வந்துள்ள நிலையில், அவர் குறித்து பதவியிலிருந்து விலகியதாக கருதி இப்புதிய நியமனம் வழங்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உள்ளூர் கிரிக்கெட்டுக்கு பொறுப்பாக இருந்த மற்றுமொரு உதவித் தலைவரான கே.மதிவானன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்விரண்டு பதவிகளும் டிசம்பர் 6ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நேற்று(12) வெளியிடப்பட்ட விசேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.