LPL போட்டி அட்டவணையில் மாற்றம்

849

இப்போது நடைபெற்றுவருகின்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) 2021 தொடர் போட்டி அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதன்படி இந்தப் பருவகாலத்திற்கான லங்கா பிரீமியர் லீக் தொடரிற்கான பிளே ஒப் சுற்றுப் போட்டிகள் நடைபெறும் திகதியிலேயே மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

பவல், தோமஸிற்கு பதிலாக இங்கிலாந்து வீரர்களை இணைக்கும் கண்டி வொரியர்ஸ்

முன்னதாக LPL தொடரின் பிளே ஒப் சுற்றின் முதல் குவாலிபையர் போட்டியும், எலிமினேட்டர் போட்டியும் இம்மாதம் 20ஆம் திகதி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இப்போட்டிகள் இரண்டும் தற்போது 19ஆம் திகதிக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.

இதேநேரம், LPL தொடரின் பிளே ஒப் போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை மஹிந்தராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் கண்டி வொரியர்ஸ் அணியில் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் பிரதியீட்டு வீரர்களாக இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

கண்டி வொரியர்ஸ் அணியினுடைய மேற்கிந்திய தீவுகள் வீரர்களான ரொவ்மன் பவல் மற்றும் டெவோன் தோமஸ் ஆகிய இருவருக்கும் அவர்களின் தேசிய அணிக்கு விளையாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டதனை அடுத்தே இந்த வீரர்கள் இருவரும், தற்போது கண்டி வொரியர்ஸ் அணியில் இங்கிலாந்தின் ரவி போபரா மற்றும் டொம் மூர்ஸ் ஆகியோருக்கு பதிலாக பிரதியீட்டு வீரர்களாக இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

திசர, அவிஷ்கவின் அதிரடியால் ஜப்னா கிங்ஸ் திரில் வெற்றி

இந்த வீரர்களில் அனுபவமிக்க ரவி போபரா அண்மையில் நிறைவடைந்த அபுதாபி T10 லீக்கில் சென்னை பிரேவ்ஸ் அணியை பிரதிநிதித்துவம் செய்திருந்ததோடு, விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான டொம் மூர்ஸ் தொடரின் சம்பியன் பட்டம் வென்ற டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக ஆடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<