சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் மெய்வல்லுனர் வீரர்களுக்கும் தரப்படுத்தல்

247

ஒலிம்பிக் மற்றும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களை உள்ளடக்கிய முக்கிய போட்டித் தொடர்களில் தகுதியினைப் பெற்றுக்கொள்வதற்காக உலக மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

இதன்படி, 2019ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள 17ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் மற்றும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் இந்த நடைமுறையை அமுல்படுத்துவதற்கு சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இராணுவ மெய்வல்லுனரில் பிரகாசித்த மலையக மற்றும் கிழக்கு வீரர்கள்

55ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ப் தொடர் அண்மையில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.

இந்த புதிய சிக்கலான தகுதி முறையானது சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படுகின்ற தனிநபர் போட்டிகளில் பங்குபற்றுகின்ற வீரர்களுக்கான புள்ளிகள் ‘IAAF World Rankings’ முறையுடன் தொடர்புடையதாக அமையப் பெற்றுள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில் மெய்வல்லுனர் வீரர்களின் செயல்திறனை முழுமையாகக் கண்கானித்து தரப்படுத்தல் இடம்பெறுவதுடன், முதல் 5 வீரர்களின் செயல்திறன்களின் சராசரி தரப்படுத்தலுக்காக பரிசீலிக்கப்படும்.

இதன்படி, அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரிலிருந்து எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள அனைத்துவிதமான சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளுக்காகவும், சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் அறிமுகப்படுத்தவுள்ள தரப்படுத்தலில் முன்னிலையில் உள்ள வீரர்களுக்கு மாத்திரம் சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இந்தப் போட்டித் தொடரில் வேக நடை, 10 ஆயிரம் மீற்றர், அஞ்சலோட்டம் மற்றும் மரதன் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளுக்காக தகுதியினைப் பெற்றுக் கொள்வதற்கான அடைவுமட்டம் இவ்வருடம் மார்ச் மாதம் 7ஆம் திகதி முதல் 2019 செப்டெம்பர் 7ஆம் திகதி வரை நடைபெறும் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு வீரர்கள் தெரிவுகள் இடம்பெறவுள்ளன.

இதேநேரம், ஏனைய போட்டிகளில் தகுதியினை பெற்றுக்கொள்வதற்கான அடைவுமட்டத்தைப் பூர்த்தி செய்ய இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் எதிர்வரும் 2019 செப்டெம்பர் 7ஆம் திகதி வரையான ஒரு வருட காலப்பகுதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தரப்படுத்தலில் முன்னிலையில் உள்ள வீரர்கள் மாத்திரம் தனிநபர் போட்டிகளுக்காக தெரிவு செய்யப்படுவர். எனினும், சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற விதிமுறைகளுக்கு அமைவாக வைல்ட் கார்ட் முறையில் மேலும் சில வீரர்களுக்கு உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, உலக மெய்வல்லுனர் வீரர்களுக்கான தரப்படுத்தல் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், அதுதொடர்பிலான விதிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளன.

சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்கு புள்ளிகள் வழங்குகின்ற முறையொன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் புள்ளிகள் வழங்கும் முறையின் கீழ் (IAAF Points) வீரர்களுக்கான தரப்படுத்தல் இடம்பெறவுள்ளது. அத்துடன், குறித்த போட்டித் தொடரில் பெற்றுக்கொள்கின்ற பதக்கங்களில் அடிப்படையில் மேலதிக (போனஸ்) புள்ளிகளும் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு பெற்றுக்கொள்கின்ற புள்ளிகள் அடிப்படையில் வீரர்களுக்கான தரப்படுத்தல் இடம்பெறவுள்ளது.

இந்த புதிய நடைமுறைமையானது முக்கியமான சர்வதேசப் போட்டிகளில் வீரர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் அமையவுள்ளது. தேசிய அளவிலான போட்டிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிகள் தரவரிசைப் பட்டியலுக்காக பரிசீலிக்கப்பட்ட போதிலும், சர்வதேப் போட்டிகளைப் பொறுத்தவரை குறைந்தளவு சாதகத்தையே பெற்றுக்கொடுக்கவுள்ளது.

எனினும், மெய்வல்லுனர்கள் குறித்த காலப்பகுதியில் தொடர்ந்து தமது திறமைகளை வெளிப்படுத்தி வந்தால் மாத்திரமே புள்ளிகள் கிடைக்கும். இல்லாவிட்டால் தகுதிபெறும் காலத்தில் இருந்து 9 மாதங்களுக்கான புள்ளிகள் குறைக்கப்படும். ஆனால், வைல்ட் கார்ட் மூலம் தெரிவாகின்ற வீரர்களுக்கு இந்த புதிய விதிமுறைகள் பொருந்தாது.

இளையோர் ஒலிம்பிக்கில் ஷெலிண்டாவுக்கு முதலிடம் : உலகில் 9ஆவது இடம்

ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயேர்ஸில் நடைபெற்றுவரும் 3ஆவது ….

உதாரணமாக 2016ஆம் ஆண்டு றியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டிகளின் அடைவுமட்டமாக 83 மீற்றர் வழங்கப்பட்டது. 2015 மே மாதம் முதலாம் திகதி முதல் 2016 ஜுலை மாதம் 03ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வீரர்கள் அந்த அடைவுமட்டத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த நிலையில், 2015 டிசம்பர் மாதம் நடைபெற்ற தெரிவுப் போட்டியில் இலங்கை ஈட்டி எறிதல் வீரர் சுமேத ரணசிங்க 83.03 மீற்றர் தூரத்தை எறிந்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றார். எனினும், குறித்த அடைவுமட்டத்தைப் பெற்றுக்கொள்ள முன்னர் சுமேத ரணசிங்க ஐந்து போட்டிகளில் பங்குபற்றியிருந்ததாக சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, அவர் வெளிப்படுத்திய திறமைகளின் அடிப்படையில் சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் புள்ளிகள் முறையின் கீழ் 1033.80 புள்ளிகளை அவர் பெற்றுக்கொண்டார். எனினும், அடைவுமட்டத்தின் படி அவர் 1144 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். இதன்படி, சுமேதவுக்கு ஒலிம்பிக் போட்டிகளுக்காக நேரடியாக தகுதிபெற்றுக் கொள்ள முடியாமல் போனது.

எனினும், வீரர்களுக்கான தரப்படுத்தலில் 32ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட காரணத்தால் அவருக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பு கிட்டியது.

அதேபோல, ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான மரதனில் 2 மணி. 19.00 செக்கன்கள் அடைவுமட்டமாக வழங்கப்பட்டிருந்தது. இதில் இலங்கை வீரர் அநுராத இந்திரஜித் குரே, லண்டன் மரதனில் பங்குபற்றி, போட்டியை 2 மணி 13.47 செக்கன்களில் நிறைவுசெய்து 40 வருடங்கள் பழைமையான இலங்கை சாதனையை முறியடித்து ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றார்.

இவ்வாறு இலங்கை வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதியினைப் பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்ட குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த காரணத்தால்தான் ஒலிம்பிக்கில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்றுக் கொண்டனர். ஆனால், சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விதிமுறையின் கீழ் ஒரேயொரு வீரரைத் தவிர வேறெந்த வீரருக்கும் ஒலிம்பிக்கில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பு உள்ளதை இதன்மூலம் அறியலாம்.

எனவே சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய விதிமுறைகளின் மூலம், ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேசப் போட்டிகளில் இலங்கை வீரர்களின் பங்குபற்றலானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தேசிய மட்டத்தில் உள்ள வீரர்கள் குறித்த காலப்பகுதியில் தொடர்ந்து தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

பிறநாடுகளினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற மெய்வல்லுனர் போட்டிகளுக்கு வீரர்களை அனுப்புவதன் மூலம் அல்லது சர்வதேச போட்டிகளை உள்நாட்டில் ஏற்பாடு செய்வதன் மூலம் சர்வதேச போட்டிகளில் போட்டியிடும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.  

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<