சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை (24) பகலிரவு ஆட்டமாக ஆரம்பமாகவிருக்கின்றது. இந்நிலையில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவரான தினேஷ் சந்திமால், குறித்த டெஸ்ட் போட்டிக்கு முன்பதாக இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.
இந்த ஊடக சந்திப்பில் அவுஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி எப்படி இருக்கும் என்பது பற்றி பேசிய சந்திமால் “ இது நிச்சயமாக எமக்கு சவாலாக இருக்கும் “ எனக் குறிப்பிட்டிருந்தார்.
பகலிரவு டெஸ்ட் போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கும் இலங்கை
சுற்றுலா இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு….
இதுவரையில் அவுஸ்திரேலிய மண்ணில் 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் இலங்கை அணி 11 போட்டிகளில் தோல்வியினை தழுவியிருப்பதோடு, 2 போட்டிகளை சமநிலையில் முடித்திருக்கின்றது. மறுமுனையில் இலங்கை அணி அவுஸ்திரேலிய மண்ணில் இதுவரையில் டெஸ்ட் வெற்றிகள் எதனையும் பதிவு செய்திருக்கவில்லை.
இவ்வாறாக இலங்கை அணி அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் வெற்றிகள் எதனையும் பெறாமல் இருப்பது மாற வேண்டும் எனில் எப்படியாக செயற்பட வேண்டும் என்பதை சந்திமால் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ (அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் வெற்றி பெறுவதை) ஒரு சவாலாக நாங்கள் எடுத்தால், ஒரு துடுப்பாட்ட வீரராகவோ பந்துவீச்சாளராகவோ எங்களுக்கு சிறந்த ஆட்டத்தினை தர வேண்டியிருக்கிறது. இதன் மூலமே, ஒரு அதிசயத்தினை நிகழ்த்த முடியும். ஒரு அணியாகவும் நாம் அதனை செய்யவே எதிர்பார்க்கின்றோம். “
அங்கு மேலும் பேசிய சந்திமால் அவுஸ்திரேலிய மண், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒரு இடம் என்பதால் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்படுவார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
Photos: Sri Lanka’s final practice session before 1st Test match in Brisbane
ThePapare.com | 23/01/2019 | Editing and re-using images without….
“ நீங்கள் போட்டி விளையாடப்படும் மைதானத்தினை பார்த்தீர்கள் என்றால், அங்கே நிறைய புற்கள் காணப்படுகின்றன. எனினும், எங்களிடம் மணிக்கு சுமார் 140 கிலோ மீட்டர்களுக்கு மேலான வேகத்தில் பந்துவீசக்கூடிய வீரர்கள் இருக்கின்றனர். “ என்றார்.
பந்துவீச்சாளர்கள் ஒருபுறமிருக்க தினேஷ் சந்திமால் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அண்மையில் அவுஸ்திரேலிய மண்ணில் இடம்பெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் ஆடிய இந்திய அணியின் செட்டெஸ்வார் புஜாராவிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
“ புஜாரா வித்தியாசம் ஒன்றினை உருவாக்கியிருந்தார். இந்த நாட்களில் இங்கே வெப்பம் அதிகமாக இருக்கிறது. (இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்) இந்திய அணியினர் அவுஸ்த்திரேலிய வீரர்களை அதிக நேரத்திற்கு பந்துவீச்சில் ஈடுபட்டு (களைப்பான நிலை ஒன்றுக்கு செல்ல) நிர்ப்பந்தம் செய்திருந்தனர். இதனை முக்கியமாக புஜாராவே செய்திருந்தார் என நினைக்கின்றேன். இதன்பிறகு, அவர்கள் (இந்திய அணியினர்) தங்களது துடுப்பாட்டத்தை மிகவும் இரசித்தவாறு மேற்கொண்டனர். நான் நினைப்பதுபடி, இதனையே இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் மூலம் நாம் கற்றிருக்கின்றோம்.
இலங்கையுடனான முதல் டெஸ்டிக்கான பதினொருவரை அறிவித்தது ஆஸி
சுற்றுலா இலங்கை அணிக்கு எதிராக நாளை (24) பிரிஸ்பேன்…..
இலங்கை அணி, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மற்றுமொரு இடமான தென்னாபிரிக்காவில் தமது முதல் டெஸ்ட் வெற்றியினை 2011ஆம் ஆண்டிலேயே பெற்றிருந்ததது. குறித்த டெஸ்ட் வெற்றி கிடைத்த போட்டி, சந்திமாலின் கன்னி டெஸ்ட் போட்டி என்பதால் அப்போட்டியின் போது கிடைத்த அனுபவங்களினையும் சந்திமால் பகிர்ந்திருந்தார்.
“ அது ஒரு சிறந்த நினைவாகும். நான் எனது கன்னி டெஸ்ட் போட்டியை தென்னாபிரிக்காவுக்கு எதிராக விளையாடினேன். அந்த டெஸ்ட் போட்டியில் நாம் வெற்றி பெற்றதோடு, அந்த டெஸ்ட் வெற்றி தென்னாபிரிக்க மண்ணில் எமக்கு கிடைத்த முதல் டெஸ்ட் வெற்றியாகவும் இருந்தது. ஒரு அணித்தலைவராக இங்கே (அவுஸ்திரேலியாவில்) டெஸ்ட் வெற்றி ஒன்றினை பெறுவது எனது கனவாகும். ஆனால், அந்த வெற்றி இங்கே இலகுவில் கிடைத்து விடாது. அதற்காக, நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த உழைப்பு (டெஸ்ட்) போட்டியின் ஐந்து நாட்களிலும் 11 வீரர்களிடமிருந்தும் கிடைக்க வேண்டும். இதனையே ஒரு அணியாக நாங்கள் எதிர்பார்க்கின்றோம். வரலாறு படைக்க இது எங்களுக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். ஒரு அணியாக வரலாறு படைப்பதையே விரும்புகின்றோம். “
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<