குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்திமால், சந்திக்க, அசங்க

402

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2.3.1 சரத்தின் பிரகாரம் கிரிக்கெட்டின் மகத்துவத்தை பாதுகாக்க தவறிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளனர்.

சந்திமாலின் மேன்முறையீட்டை விசாரிக்க ஐ.சி.சி.யினால் நீதியாணையாளர் நியமனம்

பந்தின் தன்மையை மாற்றி சேதப்படுத்தல் வேலைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் போட்டித் தடையைப் பெற்றுக்…

இலங்கைமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது தினத்தன்று காலை இரண்டு மணித்தியாலங்கள் மைதானத்திற்கு வராமல் போட்டியை தாமதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனவே, இவர்கள் செய்த குற்றம் .சி.சியின் பிரிவு 3 அபராதத்திற்குள் வருவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் டேவிட் றிச்சர்ட்சன் கடந்த 19ஆம் திகதி அறிவித்திருந்த நிலையில், இவர்கள் மூவரும் குறித்த குற்றத்தை இன்றைய தினம் (22) ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கைமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்ததாக தினேஷ் சந்திமால் மீது நடுவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தன்மீதான குறித்த குற்றச்சாட்டை தினேஷ் சந்திமால் ஏற்கனவே மறுத்திருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர், போட்டி மத்தியஸ்தர் ஜவஹல் ஸ்ரீநாத், இலங்கை அணி முகாமைத்துவம், போட்டி நடுவர்களின் முன்னிலையில் விசாரணை இடம்பெற்றது.

சந்திமாலுக்கு போட்டித் தடை : பயிற்சியாளர், முகாமையாளர் மீது குற்றச்சாட்டு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில்…

குறித்த விசாரணையில், தனது வாயில் ஏதோ இட்டதை ஏற்றுக் கொண்ட சந்திமால், ஆனால் அது என்ன என ஞாபகமில்லை என்று தெரிவித்திருந்தார். அதனையடுத்து, பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் சந்திமாலுக்கு அதிகபட்ச தண்டனையாக இரண்டு இடைநிறுத்த புள்ளிகளுடன் போட்டி ஊதியத்தின் 100 சதவீதத்தை அபராதமாக விதிக்க போட்டி மத்தியஸ்தர் நடவடிக்கை எடுத்தார்.

இரண்டு இடைநிறுத்தப் புள்ளிகள் என்பது ஒரு டெஸ்ட் தடைக்குச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தினேஷ் சந்திமாலுக்கு மேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த குற்றச்சாட்டிற்கு எதிராக அவர் நேற்று (21) மேன்முறையீடு ஒன்றை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்பிரகாரம், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுங்கு விதி ஆணைக்குழுவின் தலைவர் மைக்கல் பெல்ப் தலைமையிலான குழுவொன்று .சி.சியினால் நியமிக்கப்பட்டது.

சங்கா, மஹேல உள்ளிட்ட வீரர்களின் நிராகரிப்பு வரவேற்கத்தக்கது – அர்ஜுன ரணதுங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான அரவிந்த டி சில்வா, ரொஷான்…

இந்நிலையில், தினேஷ் சந்திமாலினால் .சி.சிக்கு சமர்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடு இன்றைய தினம் மைக்கல் பெல்ப் உள்ளிட்ட குழுவினரால் ஆராயப்படவுள்ளது. தொலைபேசி உரையாடல் அல்லது வீடியோ கலந்துரையாடல் மூலமாக இடம்பெறவுள்ள இந்த விசாரணையின் போது இலங்கை சார்பில் சட்ட ஆலோசகர்களும் பங்கொண்டு தினேஷ் சந்திமாலின் தண்டணைக்கு எதிராக ஆதாரங்கள் மற்றும் கருத்துக்களை முன்வைக்கவுள்னர்.  

இது இவ்வாறிருக்க, .சி.சியின் நடத்தைக் கோவையின் 5.2.3  சரத்தை மீறிய குற்றச்சாட்டில் தினேஷ் சந்திமால், இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க மற்றும் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு இரண்டு தொடக்கம் நான்கு வரையான டெஸ்ட் போட்டித் தடைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டால், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் போட்டித் தொடரையும், ஒருசில ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளையும் தினேஷ் சந்திமால், அசங்க குருசிங்க, சந்திக ஹத்துருசிங்க ஆகிய மூவரும் தவறவிடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க