சிவப்பு அட்டை பெற்று கண்ணீரோடு வெளியேறிய ரொனால்டோ

901

ஜுவண்டஸ் அணிக்காக தனது முதல் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் போட்டியில் ஆடிய போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்ச்சைக்குரிய முறையில் சிவப்பு அட்டை பெற்று கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

UEFA சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த பார்சிலோனா மற்றும் லீவர்பூல்

2018/19 ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான UEFA …

சம்பியன்ஸ் லீக் தொடரின் H குழுவுக்காக தனது ஆரம்பப் போட்டியில் வலென்சியா அணியை எதிர்கொண்ட ஜுவண்டஸ் தனது முன்கள வீரர் ரொனால்டோவை 29 ஆவது நிமிடத்திலேயே இழந்தது. எனினும் நேற்று (19) நடந்த இந்தப் போட்டியில் 10 வீரர்களுடன் ஆடிய ஜுவண்டஸ் இரண்டு பெனால்டி கோல்கள் மூலம் போட்டியை வென்றது.

இதில் எதிரணி பின்கள வீரர் ஜெய்சோன் முரில்லோவின் தலையை பிடித்த சம்பவத்திற்காகவே ரொனால்டோ வெளியேற்றப்பட்டார்.  

இந்நிலையில் நடத்தை விதி மீறலுக்காக ரொனால்டோ இரண்டு போட்டித் தடைக்கு முகம்கொடுக்க வாய்ப்பு எற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது சொந்த மைதானத்தில் நடைபெறும் யங் போய்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் ஒக்டோபர் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் பற்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.    

போட்டியின் 29 ஆவது நிமிடத்தில் வைத்து எதிரணி பெனால்டி எல்லைக்குள் நுழைவதை தடுத்த முரில்லோவை ரொனால்டோ தனது பூட்ஸ் பாதத்தால் தடுக்கிவிழச் செய்தார். கிழே விழுந்த முரில்லோவை எழுந்து நிற்கச் செய்வதற்காக ரொனால்டோ அவரது தலைமுடியை பிடித்து இழுத்தார்.

இதனைத் அடுத்து வலென்சியா வீரர்கள் உடனடியாக ரொனால்டோவின் செயலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு நடுவரிடம் முறையிட்டதுடன்,  ரொனால்டோவோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.  

புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றது பார்சிலோனா

லாலிகா கால்பந்து சுற்றின் நான்காவது வாரத்திற்கான …

சம்பவம் குறித்து நடுவர் பெலிக்ஸ் ப்ரிச் சக நடுவர்களுடன் ஆலோசனை பெற்றுவிட்டு ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை காண்பித்தார். இதனைப் பார்த்த ரொனால்டோ அதிர்ச்சியில் கீழே விழுந்து தனது அதிருப்தியை வெளியிட்டார். தொடர்ந்து கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.  
போட்டி நடைபெறாத வேளையிலேயே முரில்லோவுக்கு எதிராக ரொனால்டோ இப்படி நடந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 154 சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ஆடியிருக்கும் ரொனால்டோ சிவப்பு அட்டை பெற்று வெளியேறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். எனினும் ரொனால்டோ தனது கால்பந்து வாழ்வில் சிவப்பு அட்டை பெறுவது இது 11 ஆவது தடவையாகும். கடைசியாக 2017 ஓகஸ்டில் ரியல் மெட்ரிட்டுக்காக ஆடியபோது பர்சிலோனா அணிக்கு எதிரான போட்டியில் சிவப்பு அட்டை பெற்றார்.

எனினும், ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக சிவப்பு அட்டை பெற்ற அணியாக ஜுவண்டஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜுவண்டஸ் இந்த தொடரில் மொத்தம் 26 சிவப்பு அட்டைகளை பெற்றிருப்பதோடு இது வேறு எந்த அணியை விடவும் ஏழு அட்டைகள் அதிகமாகும்.    

லிவர்பூல், செல்சி அணிகளுக்கு தொடர்ந்து ஐந்தாவது வெற்றி

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது …

‘வீடியோ உதவி நடுவர் (VAR) முறை மூலம் நடந்ததை தவிர்த்திருக்கலாம். அது சரியான முடிவை தந்திருக்கும். போட்டித் தடை மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம்’ என்று ஜுவண்டஸ் பயிற்சியாளர் மெக்ஸ் அல்லெக்ரி இந்த சம்பவம் தொடர்பில் குறிப்பிட்டார்.

ரொனால்டோ இதற்கு முன்னரும் சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் கண்ணீர் விட்டிருந்தபோதும் அது அவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரியல் மெட்ரிட்டுக்காக நான்கு முறை சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்த தருணங்களில் விட்ட ஆனந்தக் கண்ணீராகவே இருந்தது.

ஒன்பது ஆண்டுகள் ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் அணிக்கு ஆடிய ரொனால்டோ இந்த பருவத்தில் இத்தாலியின் ஜுவண்டஸ் அணிக்கு 100 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தமானார்.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…