சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா – பாக். மோதல் லாஹூரில்

53

2025ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது லாஹூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

பங்களாதேஷ் அணியுடன் தோல்வியினைத் தழுவிய இலங்கை

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் போட்டிகள் அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி தொடக்கம் மார்ச் 9ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 

மொத்தம் 15 அணிகள் பங்கெடுக்கும் இந்த தொடரில் இறுதி லீக் மோதலாக பாகிஸ்தான்இந்திய அணிகள் இடையிலான போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, குறிப்பிட்ட போட்டிக்கான மைதானமாக லாஹூர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

எனினும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் செல்ல இந்திய அரசு அனுமதி வழங்காத சந்தர்ப்பம் ஒன்றில் 2023ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடர் போன்று இரண்டு நாடுகளில் தொடரினை (Hybrid Model) நடாத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இரண்டு நாடுகளில் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறுமெனில் இந்திய அணியின் போட்டிகள் 2023ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியாவின் போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது போன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறலாம் எனக் கூறப்பட்டிருக்கின்றது 

அதேநேரம் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதல் போட்டி கராச்சியில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதோடு, தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் கராச்சி மற்றும் லாஹூர் ஆகிய இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் இந்திய அணியின் போட்டிகளுக்காக லாஹூர் மைதானம் தெரிவு செய்யப்பட்டுள்ளது 

2024 கரீபியன் பிரீமியர் லீக்கில் களமிறங்கும் இலங்கை வீரர்கள்

அதேவேளை சர்வதேச கிரிக்கெட் வாரியமோ அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் சபையோ, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரினை இரண்டு நாடுகளில் நடாத்துவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளாத நிலையில் அது தொடர்பிலான இறுதி முடிவு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடமே (BCCI) காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<