மெஸ்ஸியின் சாதனை கோலுடன் பார்சிலோனா வெற்றி

170

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (24) அதிகாலை நடைபெற்றன. குறித்த போட்டிகளின் விபரம் வருமாறு, 

பார்சிலோனா எதிர் ஸ்லாவியா ப்ரகுவே

லியோனல் மெஸ்ஸியின் சாதனை கோல் மூலம் செக் குடியரசின் ஸ்லாவியா ப்ரகுவே அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோன அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

ரியல் மெட்ரிட் தீர்க்கமான வெற்றி: இங்கிலாந்து கழகங்களுக்கு இலகு வெற்றி

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் குழு ……..

இந்தப் போட்டியில் கோல் பெற்றதன் மூலம் 15 சம்பியன்ஸ் லீக்கில் பருவங்களில் தொடர்ச்சியாக கோல் பெற்ற வீரராக மெஸ்ஸி சாதனை படைத்தார். இதன்போது மன்செஸ்டர் யுனைடட் முன்னாள் வீரர் ரியான் கிக்ஸின் சாதனையையே மெஸ்ஸி முறியடித்தார். 

செக் குடியரசின் சினபோ அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 3 ஆவது நிமிடத்திலேயே மெஸ்ஸி, ஆர்துர் பரிமாற்றிய பந்தைக் கொண்டு கோல் புகுத்தினார். 

செக் சம்பியன் அணி 16 யார்ட் தூரத்தில் இருந்து லூகாஸ் மசுபொட்ஸ் கடத்திய பந்தை கொண்டு ஜான் பொரில் பெற்ற கோல் மூலம் 50 ஆவது நிமிடத்தில் கோல் நிலையை சமனுக்கு கொண்டுவந்தது. 

இந்நிலையில் 57 ஆவது நிமிடத்தில் வைத்து மெஸ்ஸி உதைத்த ப்ரீ கிக் லுவிஸ் சுவாரஸிடம் செல்ல, அவர் உதைத்த பந்து பீட்ர் ஒடாயின்காவிடம் பட்டு பார்சிலோனாவுக்கு சார்பாக ஓன் கோலாக மாறியது. அதுவே ஸ்பெயின் கழகத்திற்கு வெற்றி கோலாகவும் அமைந்தது. 

லா லிகாவில் முன்னிலையில் இருக்கும் பார்சிலோனா தற்போது அனைத்து போட்டி தொடர்களிலும் தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளை ஈட்டியுள்ளது. அந்த அணி சம்பியன்ஸ் லீக்கில் 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

அஜக்ஸ் எதிர் செல்சி

மிச்சி பட்சுவாவி பதில் வீரராக வந்து கடைசி நேரத்தில் பெற்ற கோலின் உதவியுடன் அஜக்சுக்கு எதிராக செல்சி த்ரில் வெற்றி ஒன்றை பெற்றது.  

H குழுவில் கடந்த இரு போட்டிகளிலும் வெற்றி ஈட்டி வலுவான நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கிய நெதர்லாந்து கழகமான அஜக்ஸ் கடுமையாக போராடியபோதும் போட்டி முடிவதற்க 4 நிமிடங்கள் இருக்கும்போது பட்சுவாவி போட்ட கோலில் இருந்து அந்த அணியால் மீள முடியவில்லை. 

எனினும் முதல் பாதியில் அஜக்ஸ் போட்ட கோல் ஒன்று வீடியோ நடுவர் உதவியால் நிராகரிக்கப்பட்டது.  

நேர்த்தியாக ஆடிய செல்சி பெற்ற வெற்றி மூலம் அந்த அணி தனது குழுவில் அஜக்சுடன் முதல் இடத்தில் 6 புள்ளிகளை பகிர்ந்துகொண்டுள்ளது. 

இன்டர் மிலான் எதிர் புருஷியா டோர்ட்முண்ட்

டோர்ட்முண்ட் அணிக்கு எதிராக 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி ஈட்டிய இன்டர் மிலானால் சம்பியன்ஸ் லீக்கின் குழுநிலையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய முடிந்தது. 

ஷெபீல்ட் அணியிடம் ஆர்சனலுக்கு அதிர்ச்சித் தோல்வி

ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஆர்சனல் அணிக்கு …..

ஆர்ஜன்டீன வீரரான லோடரோ மார்டினஸ் 22 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் முன்னிலை பெற்ற இத்தாலி கழகமான இன்டர் மிலான் 89 ஆவது நிமிடத்தல் அன்டோனியோ கன்ட்ரேவா பெற்ற கோல் மூலம் வெற்றியை உறுதி செய்துகொண்டது.  

எனினும் இன்டர் மிலானுக்கு மற்றொரு கோலை புகுத்த பெனால்டி வாய்ப்பு ஒன்று கிட்டியபோதும் மார்டினஸ் அதைத் தவறவிட்டார். 

லிவர்பூல் எதிர் KRC ஜென்க்

ஒக்ஸ்லடே சம்பர்லைன் இரட்டைக் கோல் பெற பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜென்க் அணிக்கு எதிரான போட்டியில் லிவர்பூல் 4-1 என இலகு வெற்றி ஒன்றை பெற்றுக்கொண்டது. 

மன்செஸ்டர் யுனைடட்டுக்கு எதிரான தனது கடைசி ப்ரீமியர் லீக்கை சமநிலை செய்தபோதும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி இருக்கும் லிவர்பூல் சம்பியன்ஸ் லீக் E குழுவில் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.  

இங்கிலாந்து முன்கள வீரரான சம்பர்லைன் இரண்டாவது நிமிடத்தில் தாழ்வாக உதைத்து பெற்ற கோல் மூலம் முன்னிலை பெற்ற லிவர்பூல் சம்பர்லைன் பெற்ற அபார கோல் மூலம் 57ஆவது நிமிடமாகும்போது 2-0 என ஆதிக்கம் செலுத்தியது.     

தொடர்ந்து சாடியோ மானே மூன்றாவது கோலை பெற மொஹமட் சலாஹ் நான்காவது கோலை பெற்ற நிலையில் லிவர்பூலின் வெற்றி உறுதியானது. 

 >>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<