சென் மேரிஸை வீழ்த்திய மாத்தறை சிடி

Champions League 2022

348

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது வாரத்திற்கான முதல் போட்டியில் யாழ்ப்பாணம் சென் மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை 3-1 என்ற கோல்கள் கணக்கில் மாத்தறை சிடி கழகம் வெற்றி கொண்டுள்ளது.

நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமைகள் காரணமாக இரண்டு வாரங்களாக ஒத்திவைக்கப்பட்ட சம்பியன்ஸ் லீக் தொடரின் ஆறாவது வாரத்திற்கான போட்டிகள் மீண்டும் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமாகின.

இந்நிலையில் ஆறாவது வாரத்திற்கான முதல் போட்டி யாழ்ப்பாணம் சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் மாத்தறை சிடி கழகங்களுக்கு இடையில் குருணாகலை மாலிகாபிடிய அரங்கில் இடம்பெற்றது.

போட்டியின் 37ஆவது நிமிடத்தில் லார்பி பிரின்ஸ் பெற்ற கோலினால் மாத்தறை சிடி கழகம் முதல் பாதியில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 12 நிமிடங்களில் லார்பி பிரின்ஸ் தனது அடுத்த கோலையும் பெற்றார். தொடர்ந்து 71ஆவது நிமிடத்தில் மற்றொரு வெளிநாட்டு வீரரான B.பிரின்ஸ் மாத்தறை சிடி அணிக்கான அடுத்த கோலையும் பெற்றார்.

சென் மேரிஸ் அணிக்கான ஆறுதல் கோலை போட்டியின் 80ஆவது நிமிடத்தில் தேசிய அணி வீரர் மரியதாஸ் நிதர்சன் பெற்றார்.

எனவே, போட்டி நிறைவில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற மாத்தறை சிடி வீரர்கள் தொடரில் தொடர்ந்து தமது ஆறாவது வெற்றியையும் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கின்றனர்.

முழு நேரம்: சென் மேரிஸ் வி.க 1 – 3 மாத்தறை சிடி க

கோல் பெற்றவர்கள்

சென் மேரிஸ் வி.க – மரியதாஸ் நிதர்சன் 80’

மாத்தறை சிடி க –  லார்பி பிரின்ஸ் 37’&57’, B.பிரின்ஸ் 71’

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<