சம்பயின்ஸ் லீக் கால்பந்து தொடரின் எட்டாம் வாரத்திற்கான ஒரு போட்டியில் பெலிகன்ஸ் அணி சொலிட் அணியை இலகுவாக வெல்ல, இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகம் தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
சனிக்கிழமை (13) இடம்பெற்ற மேலும் ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
சொலிட் வி.க எதிர் பெலிகனஸ் வி. க
சம்பியன்ஸ் லீக் தொடரில் இறுதியாக இடம்பெற்ற மோதல்களின் மூடிவுகளின்படி பலமான அணியாக உள்ள பெலிகன்ஸ் மற்றும் இதுவரை எந்தவொரு வெற்றியையும் பதிவு செய்யாத சொலிட் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி குருணாகலை மாலிகாபிடிய அரங்கில் இடம்பெற்றது.
போட்டியின் முதல் பாதியில் பெலிகன்ஸ் வீரர்கள் 3 கோல்களைப் பெற, சொலிட் அணி தமக்கு முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் கிடைத்த பெனால்டி வாய்ப்பினால் மின்ரோன் மூலம் தமக்கான ஒரு கோலைப் பெற்றது.
- சம்பியன்ஸ் லீக்கில் முதல் இடத்திற்கு முன்னேறிய ஜாவா லேன்
- மாத்தறை சிடியின் வெற்றிநடைக்கு முடிவுகட்டிய சுபர் சன்
- இலகு வெற்றியை பெற்ற நிகம்பு யூத், செரண்டிப்
பின்னர் ஆரம்பமான இரண்டாம் பாதியில் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெலிகன்ஸ் வீரர்கள் மேலதிகமாக 5 கோல்களைப் பெற, போட்டி நிறைவில் அவ்வணி 8-1 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
பெலிகள்ஸ் அணிக்காக வெளிநாட்டு வீரர் சாச மற்றும் நப்ஷான் மொஹமட் ஆகியோர் தலா 3 கோல்களைப் பெற்று, தமது ஹெட்ரிக் கோல்களைப் பதிவு செய்தனர்.
இது இந்த தொடரில் தனது மூன்றாவது போட்டியில் சாச பதிவு செய்த இரண்டாவது ஹெட்ரிக் கோல் என்பது குறிப்பிடத்தக்கது.
முழு நேரம்: சொலிட் வி.க 1 – 8 பெலிகனஸ் வி. க
கோல் பெற்றவர்கள்
- சொலிட் வி.க – நிமால் மின்ரோன் 45’(P)
- பெலிகனஸ் வி. க – T. சசா 17’ 25’ & 50’, நப்ஷான் மொஹமட் 39’ 74’ & 87’, எடிசன் பிகுராடோ 61’, ஜேகுமார் சான்தன் 72’
மொறகஸ்முல்ல வி.க எதிர் இலங்கை பொலிஸ் வி.க
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் 15 நிமிடங்களுக்குள் இரு அணியினரும் தலா ஒரு கோலைப் பெற்றமையினால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் நிறைவுற்றது.
இரண்டாம் பாதி ஆரம்பித்தவுடனேயே மாற்று வீரராக வந்த பொலிஸ் அணியின் ஹசரங்க பிரியனாத் போட்டியின் 76ஆவது நிமிடத்தில் வெற்றி போலைப் பெற்றுக் கொடுக்க, 2-1 என வெற்றி பெற்ற பொலிஸ் விளையாட்டுக் கழகம் தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
முழு நேரம்: மொறகஸ்முல்ல வி.க 1 – 2 இலங்கை பொலிஸ் வி.க
கோல் பெற்றவர்கள்
- மொறகஸ்முல்ல வி.க – திசர டி சில்வா 22’
- இலங்கை பொலிஸ் வி.க – அந்தோனி தனுஜன் 10’, ஹசரங்க பிரியனாத் 76’
சுபர் சன் வி.க எதிர் நியூ ஸ்டார் வி.க
காலி மாவட்ட விளையாட்டுத் தொகுதி அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முழு நேர நிறைவு வரையில் எந்த அணி வீரர்களாலும் கோல்கள் எதுவும் பெறப்படாமையினால் ஆட்டம் சமநிலை பெற, இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுக் கொண்டன.
முழு நேரம்: சுபர் சன் வி.க 0 – 0 நியூ ஸ்டார் வி.க
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<