சொலிட் விளையாட்டுக் கழகத்தை 7-0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வெற்றி கொண்ட செரண்டிப் கால்பந்து கழகம் சம்பயின்ஸ் லீக் கால்பந்து தொடரில் தமது ஆறாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்து தொடரில் ஏழாவது வாரத்திற்கான இறுதி ஆட்டமாக திங்கட்கிழமை (01) சுகததாச அரங்கில் இந்தப் போட்டி இடம்பெற்றது.
- வெற்றிகளை சுவைத்த ஜாவா லேன், சோண்டர்ஸ், மாத்தறை சிடி
- சுபர் சன்னை வீழ்த்திய செரண்டிப்; இறுதி நேரத்தில் வெற்றியை இழந்த பெலிகன்ஸ்
- இரண்டாம் பாதியில் அசத்திய ஜாவா லேன்; நிகம்பு யூத், SLTB அணிகளுக்கு வெற்றி
- இலங்கையை இலகுவாக வென்ற இந்தியா
போட்டியின் ஆரம்பம் முதல் செரண்டிப் வீரர்கள் அடுத்தடுத்து கோலுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திய போதும், எதிரணியின் கோலுக்கு அண்மையில் சென்று அனைத்து வாய்ப்புக்களையும் வீணடித்தனர்.
எனினும், 23ஆவது நிமிடத்தில் பயாஸ் மூலம் கோல் கணக்கை ஆரம்பித்த செரண்டிப் அணிக்கு, எவன்ஸ் மற்றும் சப்வான் ஆகியோர் முதல் பாதியில் ஒவ்வொரு கோலைப் பெற்றுக் கொடுத்தனர். எனவே, முதல் பாதி நிறைவடையும்போது செரண்டிப் அணி 3-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்த இரண்டாவது பாதியின் 52ஆவது நிமிடத்தில் செரண்டிப் அணிக்காக தனது கன்னிப் போட்டியில் களம்கண்ட வின்சண்ட் கீதன் ஒரு கோலைப் பெற, எவன்ஸ் மேலும் இரண்டு கோல்களைப் பெற்று, இந்த தொடரில் தனது இரண்டாவது ஹட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.
மீண்டும் இறுதி நிமிடங்களில் செரண்டிப் பின்கள வீரர் நிஷான் ஜீவன்த அவ்வணிக்கான ஏழாவது கொலையும் பெற்றுக் கொடுக்க, போட்டி நிறைவில் 7-0 என செரண்டிப் கால்பந்து கழகம் இலகுவாக வெற்றியை சுவைத்தது.
இந்தப் போட்டி முழுவது செரண்டிப் வீரர்கள் 10 இற்கும் அதிகமான இலகுவான கோல் வாய்ப்புக்களை வீணத்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் இந்த வெற்றியுடன் 7 போட்டிகள் நிறைவில் 6 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் செரண்டிப் அணி தரப்படுத்தலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
முழு நேரம்: செரண்டிப் கா.க 7 – 0 சொலிட் வி.க
கோல் பெற்றவர்கள்
செரண்டிப் கா.க – மொஹமட் பயாஸ் 25’, அசன்டெ எவன்ஸ் 28’,52’&73’, மொஹமட் சபான் 38’, வின்செண்ட் கீதன் 52’, நிஷான் ஜீவன்த 88’
ஏழு வார நிறைவில் புள்ளிப்பட்டியல்
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<