இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் பங்களாதேஷ் தேசிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளவர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் தலைவர் அக்ரம் கான் கூறுகையில் “பங்களாதேஷ் அணியின் தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளர் சிம்பாப்வேயை சேர்ந்த ஹீத் ஸ்ட்ரீக்கின் பதவிக்காலம் மே மாதத்தோடு முடிவடைகிறது. அத்தோடு அவர் இந்தியாவில் உள்ள தேசிய கிரிக்கட் எகடமியிற்கு பயிற்சிவிப்பாளராக செல்லவுள்ளார். இதனால் பங்களதேஷ் அணிக்கு புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஒருவரை நியமிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.”
இலங்கைக்கு எதிரான அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாம் அறிவிப்பு
டாகா ட்ரிபியுன் செய்தி சேவைக்கு பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் தலைவர் அக்ரம் கான் கருத்துத் தெரிவிக்கையில் “எமக்கு நிரந்தரமான ஒரு பயிற்சிவிப்பாளர் தேவை, அதனால் நாம் ஹீத் ஸ்ட்ரீக்கைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால் அவர் செல்லவேண்டும் என்றால் நாம் அதைத் தடுக்கமாட்டோம். நாம் அவரை விட சிறந்த ஒருவரைத் தெரிவு செய்வோம்” என்று கூறியுள்ளார்.
அவர் கூறிய வேறொரு சிறந்த பயிற்சியாளர் பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த சம்பக்க ராமநாயக்க மற்றும் சமிந்த வாஸ், பாகிஸ்தானின் அகீப் ஜாவித், இந்தியாவின் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் சிலர்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல் தொடரின் இறுதிக்கட்டப் போட்டிகள்
சம்பக்க ராமநாயக்க ஏற்கனவே பங்களதேஷ் அணியின் பந்துவீச்சு பயிற்சிவிப்பாளராக இருந்து வந்துள்ளதோடு தற்போது இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சிவிப்பாளராக செயற்பட்டு வருகிறார். அதனால் அவர் பங்களாதேஷ் பந்துவீச்சு பயிற்சிவிப்பாளராகுவதற்கான சாத்தியமில்லை. அத்தோடு சமிந்த வாஸ் இதற்கு முன் இலங்கை, நியுசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு பந்துவீச்சு பயிற்சிவிப்பாளராக செயற்பட்டுள்ளார். சமிந்த வாஸ் மொத்தமாக 111 டெஸ்ட் போட்டிகளிலும் 322 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடி 755 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதற்கிடையில், பங்களாதேஷின் தலைமைப் பயிற்சியாளர், சந்திகா ஹத்துருசிங்க அவரது பதவிக் காலத்தை நீடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதோடு அவருக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இலங்கையைச் சேர்ந்த உடலமைப்பு பயிற்சியாளரான மரியோ விள்ளவராயனும் பங்களதேஷ் கிரிக்கட் சபையோடு தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்