இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமனம்

2002

இலங்கை அணியின் பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளர் சம்பக்க ராமநாயக்கவுக்குப் பதிலாக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையுடன் போராடுவது சவாலானது என்கிறார் விராத் கோலி

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதலிடத்தில் இருந்தபோதும் இலங்கை..

இதற்கு முன்னதாக அவர் இலங்கையிலுள்ள இளம் பந்து வீச்சாளர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் கவனம் செலுத்தியிருந்தார். அந்த வகையில், தேசிய மட்டத்திலுள்ள 19 வயதுக்குட்பட்ட இளம் பந்து வீச்சாளர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் திறமைகளை மேம்படுத்தியிருந்தார். அத்துடன்இலங்கை A குழாமின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக செயல்பட்டிருந்த நிலையிலேயே தேசிய அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இதற்கு முன்னர் கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சமிந்த வாஸ் பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கை   கிரிக்கெட் வரலாற்றில், சமிந்த வாஸ் வெற்றிகரமான மற்றும் பல சாதனைகளை படைத்த பந்து வீச்சாளர் ஆவார். 111 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள அவர், 355 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அதேநேரம், 322 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

சூழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்குப் பின்னர் இலங்கை அணி சார்பாக கூடிய விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல், 300 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய இரண்டாவது பந்து வீச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டு ஹட்ரிக் உள்ளடங்கலாக 19 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்திய உலக சாதனையையும் தன்னகத்தே வைத்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டுக்கான ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஒரு நாள் போட்டித் தொடருக்காக, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆலன் டொனலை குறுகிய கால அடிப்படையில்  பந்து வீச்சு ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் நியமித்திருந்தது.

எவ்வாறிருப்பினும், இலங்கை அணியின் முன்னாள் வலது கை வேகப்பந்து வீச்சாளரான சம்பக்க ராமநாயக்க கடந்த 2001ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளாராக அடுத்தடுத்து கடமையாற்றியிருந்தார்.  

தற்பொழுது 52 வயதாகும் சம்பக்க, 1987ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அந்நாட்களில் 18 டெஸ்ட் மற்றும் 62 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவர் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.