BPL அணியின் பயிற்சியாளராக அவதாரம் எடுக்கும் சமிந்த வாஸ்

481

இலங்கை கிரிக்கெட் முன்னாள் வேகப்பந்து நட்சத்திரமான சமிந்த வாஸ், பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T20 தொடரின் புதிய பருவத்தில் டாக்கா டொமினேட்டர்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

>> ILT20 தொடரில் விளையாடவுள்ள மதீஷ பதிரண

இதன் மூலம் சமிந்த வாஸ் முதன் முறையாக T20 லீக் போட்டிகளில் ஆடும் வெளிநாட்டு அணியொன்றுக்கு தலைமைப் பயிற்சியாளராக செயற்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் அணி உட்பட பல்வேறு அணிகளில் பயிற்சியாளராக பணி புரிந்திருக்கும் சமிந்த வாஸ், தனது அனுபவம் மூலம் டாக்கா டொமினேட்டர்ஸ் அணிக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாக்கா டொமினேட்டர்ஸ் அணியில் பங்களாதேஷின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான தஸ்கின் அஹ்மட் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் டாக்கா டொமினேட்டர்ஸ் அணியில் இலங்கையைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சு சகலதுறைவீரர் சாமிக்க கருணாரட்ன மற்றும் முன்வரிசை துடுப்பாட்டவீரர் டில்ஷான் முனவீர ஆகியோரும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> ஜனவரியில் ஆரம்பமாகவுள்ள ILT20 தொடர்!

இதேவேளை மொத்தம் 7 அணிகள் பங்குபெறும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் ஜனவரி மாதம் 5ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.

>>  கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<