இலங்கை அணிக்கு இரண்டாவது பாரிய அடி

1878
Dushmantha Chameera

இலங்கை அணிக்குக் கிடைத்துள்ள, மணித்தியாலத்திற்கு 140 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் பந்து வீசும் திறமை கொண்ட வேகப்பந்து வீச்சாளர் துஸ்மன்த சமீர உபாதைக்குள்ளாகியுள்ளார்.

அவரது கீழ் முதுகில் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் இவருக்கு 4 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால் சமீர சிகிச்சைகளுக்காக விரைவில் இலங்கை திரும்பவுள்ளார். இதனையிட்டு சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு நாளை புதன்கிழமை இவருக்குப் பதிலாக விளையாடவுள்ள வீரரைத் தெரிவு செய்யக் கூடவுள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இணைகிறார் குசல்

சமீரவின் உபாதை இன்று காலை வெளிவந்த MRI/CT ஸ்கேன்களின் முடிவின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இங்கிலாந்துக்கு எதிரான 1ஆவது டெஸ்ட் போட்டியில் சமீர 64 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதில் முக்கிய விக்கட்டான சதம் பெற்ற ஜொனி பெயார்ஸ்டோவின் விக்கட்டும் அடங்கும்.

2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான துஸ்மன்த சமீரா இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் விளையாடிய அந்த 5 போட்டிகளில் 27.28 என்ற பந்துவீச்சு சராசரியில் 21 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  அதில் அவரது சிறந்த பந்து வீச்சுப் பிரதி 47 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை வீழ்த்தியமையாகும்.  அத்தோடு சமீர 9 ஒருநாள் போட்டிகளில் 10 விக்கட்டுகளையும் 13 டி20 போட்டிகளில் 10 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது. இந்த நிலையில் கடந்த வாரம் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத்திற்கு தோற்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விலகி நாடு திரும்ப வேண்டிய நிலைஏற்பட்டது. இது இவ்வாறு இருக்க தற்போது சமீரவும் உபாதை காரணமாக நாடு திரும்ப இருப்பது இலங்கை அணிக்கு இரண்டாவது பெரிய அடியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்