இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அதபத்து லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
LPL தொடரின் ஆரம்ப விழா திங்கட்கிழமை (01) இரவு கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
>> T20 உலக சம்பியன்களாக நாமம் சூடிய இந்தியா
இந்தநிலையில் LPL தொடரை இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அதபத்து இம்முறை ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதேநேரம் LPL தொடரின் தூதுவரான அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கல் கிளார்க் இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
நடப்பு சம்பியனான கண்டி அணியின் தலைவர் வனிந்து ஹஸரங்க, போட்டித் தொடரின் தூதுவரான மைக்கல் கிளார்க்கிடம் கிண்ணத்தை கையளிக்கவுள்ளார்.
இதேவேளை இந்த ஆரம்ப நிகழ்வின் போது LPL தொடருக்கான பாடலும் வெளியிடப்படவுள்ளது. இந்த பாடல் வெளியீட்டில் யொஹானி, டீ.ஜே. மாஸ், அப்ஷி மற்றும் ரோமைன் வில்லிஸ் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
LPL தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் மாலை 06.15இற்கு ஆரம்பமாகவுள்ளதுடன், முதல் போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ் மற்றும் கண்டி பெல்கோன்ஸ் அணிகள் பலப்பரீட்சைப்படுத்தவுள்ளன.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<