CPL தொடரில் விளையாடவுள்ள சமரி அதபத்து

Women’s CPL 2022

242

மேற்கிந்திய தீவுகளில் முதன்முறையாக நடைபெறவுள்ள மகளிருக்கான கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரில் இலங்கை அணித்தலைவி சமரி அதபத்து விளையாடவுள்ளார்.

கரீபியன் பிரீமியர் லீக் தொடர் 31ம் திகதி முதல் செப்டம்பர் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ளது.

நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடவுள்ள குமார, சீகுகே, அசலங்க!

இந்தநிலையில் சமரி அதபத்து, ஸ்டெப்பினி டெய்லர் தலைமையிலான கயானா அமேஷன் வொரியர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை மகளிர் கிரிக்கெட்டை பொருத்தவரை வெளிநாட்டு லீக் தொடர்களில் சமரி அதபத்து, உதேசிகா பிரபோதனி மற்றும் சஷிகலா ஸ்ரீவர்தன ஆகியோர் மாத்திரமே விளையாடியுள்ளனர்.

இதில் சமரி அதபத்து மாத்திரமே கியா சுபர் லீக், மகளிர் பிக் பேஷ் லீக், மகளிர் ஐ.ப.எல். மற்றும் பையர்பிரேக் அழைப்பு போன்ற பல்வேறு வெளிநாட்டு தொடர்களில் விளையாடியுள்ளார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<