சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள 2023ம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் T20I அணியின் தலைவியாக இலங்கை அணியின் தலைவி சமரி அதபத்து பெயரிடப்பட்டுள்ளார்.
சமரி அதபத்து கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்தார். T20 உலகக்கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தங்களுடைய முதல் போட்டியில் 50 பந்துகளுக்கு 68 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
>> மே.இ.தீவுகளுக்கெதிரான அவுஸ்திரேலிய ஒருநாள் குழாம் அறிவிப்பு
இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று உலகக்கிண்ணத்தில் எதிர்பாராத ஆரம்பத்தை கொடுத்தது. அதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான T20I தொடரை இலங்கை அணி முதன்முறையாக இங்கிலாந்து மண்ணில் வைத்து வெற்றிக்கொண்டது. இந்த தொடரிலும் இவர் அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு உதவினார். அதுமாத்திரமின்றி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் பிரகாசித்திருந்தார்.
இந்த பிரகாசிப்புகளின் அடிப்படையில் சமரி அதபத்து இந்த ஆண்டுக்கான சிறந்த அணியில் இடம்பெற்றுள்ளதுடன், அவுஸ்திரேலிய அணியின் பெத் மூனி, மேற்கிந்திய தீவுகளின் ஹெய்லி மெதிவ்ஸ், நியூசிலாந்தின் அமீலியா கெர் மற்றும் அவுஸ்திரேலியாவின் எல்லிஸ் பெரி போன்ற முன்னணி வீராங்கனைகள் ஐசிசி வெளியிட்டுள்ள ஆண்டுக்கான சிறந்த T20I அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஐசிசியின் 2023ம் ஆண்டுக்கான T20I சிறந்த அணி
- சமரி அதபத்து (தலைவி)
- பெத் மூனி
- லோரா வோல்வார்ட்
- ஹெய்லி மெதிவ்ஸ்
- நட் ஸ்கேவியர் புரொண்ட்
- அமீலியா கெர்
- எல்லிஸ் பெரி
- அஷ் கார்ட்னர்
- தீப்தி சர்மா
- ஷோபி எக்ஷ்லெஸ்டோன்
- மேகன் ஸ்கொட்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<