அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிக் பேஷ் லீக்கின் (WBBL) தொடர் ஆட்ட நாயகியாக இலங்கை அணியின் தலைவி சமரி அதபத்து தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சமரி அதபத்து மகளிருக்கான பிக் பேஷ் லீக்கில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடி வருவதுடன், சகலதுறைகளிலும் பிரகாசித்து வருகின்றார்.
>> ரொஷான் அதிரடி நீக்கம்; புதிய அமைச்சராக ஹரின் நியமனம்
இவர் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 129.69 என்ற ஓட்ட வேகத்துடன் 42.58 என்ற ஓட்ட சராசரியில் 511 ஓட்டங்களை இதுவரை குறித்துள்ளார். இதில் 5 அரைச்சதங்களை கடந்துள்ள இவர், 17 சிக்ஸர்கள் மற்றும் 69 பௌண்டரிகளை விளாசியுள்ளார்.
பெத் மூனிக்கு அடுத்தப்படியாக ஓட்டக்குவிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள சமரி அதபத்து பந்துவீச்சிலும் பிரகாசித்துள்ளார். சமரி அதபத்து பந்துவீச்சில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிராக 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<