ந்திய அணியின் நட்சத்திர வீரர் விராத் கொஹ்லி – அபிஷேக் பச்சன் அணிகளுக்கிடையிலான செலிபிரிட்டி கிளாசிகோ 2016 கால்பந்துப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டி 2-2 என சமநிலையில் முடிந்தது.
இந்திய கிரிக்கட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரான விராத் கொஹ்லி அறக்கட்டளை நடத்தி வருகிறார். இவரது அறக்கட்டளை பொலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன் நடத்தும் “பிளேயிங் பொர் ஹியூமனிட்டி” என்ற அறக்கட்டளையுடன் இணைந்து கால்பந்து போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.
சரே அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்றார் சங்கா
இதில் விராத் கொஹ்லி தலைமையில் ஒரு அணியும், அபிஷேக் பச்சன் தலைமையிலான ஒரு அணியும் உருவானது. விராத் கொஹ்லி அணியில் இந்திய ஒருநாள் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி உட்பட ரவி அஸ்வின், ஷீகர் தவான், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் மற்றும் சில வீரர்கள் இடம்பிடித்திருந்தனர். அபிஷேக் பச்சன் அணியில் ஆதித்யா ராய் கபூர், ஷூஜித் சர்கார், ராஜ் குந்த்ராவுடன் பல நட்சத்திரங்கள் களம் இறங்கினார்கள்.
இந்தப் போட்டிக்கு ‘செலிபிரிட்டி கிளாசிகோ 2016’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. அந்தேரி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் உள்ள மும்பை கால்பந்து மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று நடைபெற்றது. விராத் கொஹ்லி அணிக்கு ‘ஆல் ஹார்ட் கால்பந்துக் கழகம்’என்றும், அபிஷேக் பச்சன் அணிக்கு ‘ஓல் ஸ்டார் கால்பந்துக் கழகம்’எனவும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அபிஷேக் பச்சன் அணிக்கு ரன்பீர் கபூர் தலைமை தாங்கினார்.
ரன்பீர் தலைமையிலான ஓல் ஸ்டார் அணி முதல் கோலை அடித்தது. சிர்கார் இந்த கோலை அடித்தார். அதன்பின் அண்டோனியோ பெகோரா மேலும் ஒரு கோல் அடித்தார். இதற்குப் பதிலடியாக விராத் கொஹ்லி அணியில் யுவராஜ் மற்றும் லோகேஷ் ராஹுல் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் 2-2 என சமநிலையில் முடிந்தது.
இந்தப் போட்டி குறித்து அபிஷேக் பச்சன் கூறுகையில் ‘‘போட்டி சமநிலையில் முடிவுற்றது நல்ல விஷயம். நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். ஏனென்றால் கடந்த முறை நாங்கள் ஒரு கோல் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். ரன்பீர் மற்றும் அவரது தலைமையில் விளையாடியவர்களால் நாங்கள் பெருமையடைகிறோம்” என்றார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்