T20i புதிய தரவரிசையில் இலங்கை மற்றும் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்

455

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டுள்ள புதிய T20 அணிகளுக்கான தரவரிசை மற்றும் வீரர்களுக்கான தரவரிசை என்பவற்றில் இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை வீரர்கள் முன்னேற்றம் காண்பித்திருக்கின்றனர்.

<<தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில் மீண்டும் நிறவெறி சர்ச்சை ???>>

அதன்படி, புதிய T20 அணிகளுக்கான தரவரிசையில் ஏற்கனவே 10ஆவது இடத்தில் காணப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி தற்போது 09ஆவது இடத்திற்கு 233 புள்ளிகளுடன் முன்னேறியிருக்கின்றது. இதேநேரம் T20 அணிகள் தரவரிசையில் முதலாம் இடத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 278 புள்ளிகளுடனும் இரண்டாம், மூன்றாம் இடங்களில் முறையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 264 புள்ளிகளுடனும் காணப்படுகின்றன.

இதேநேரம் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் முறையே 255 மற்றும் 249 புள்ளிகளுடன் 4ஆம், 5ஆம் இடங்களில் உள்ளன.

அதேநேரம் புதிதாக வெளியிடப்பட்டுள்ள T20 அணிகளின் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கையின் வனிந்து ஹஸரங்க (139 புள்ளிகளுடன்) 08ஆம் இடத்திற்கு முன்னேறியிருக்கின்றார்.

தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான மோதலில் துடுப்பாட்ட வீரராக சிறப்பாட்டத்தினை வெளிப்படுத்திய வனிந்து ஹஸரங்க 08ஆவது இடத்திற்கு வந்திருப்பதன் மூலம் T20 சகலதுறைவீரர்கள் வரிசையில் முதல் தடவையாக பத்து இடங்களுக்குள் முன்னேறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் T20 சகலதுறை வீரர்கள் தரவரிசையில் பங்களாதேஷின் சகீப் அல் ஹசன் (275 புள்ளிகளுடன்) தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

T20 சகலதுறை வீரர்கள் தரவரிசை ஒருபக்கமிருக்க வனிந்து ஹஸரங்க T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 726 புள்ளிகளுடன் தொடர்ந்தும் இரண்டாம் இடத்தில் காணப்பட, T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தப்ரைஸ் சம்ஷி 750 புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்படுகின்றார்.

<<ஜப்னா கிங்ஸ் அணியுடன் இணையும் டு பிளெசிஸ், வஹாப் ரியாஷ்>>

புதிய T20 துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையினை நோக்கும் போது இங்கிலாந்தின் டாவிட் மலான் (831 புள்ளிகளுடன்) முதலிடத்தில் காணப்பட, பாகிஸ்தானின் பாபர் அசாம் (896 புள்ளிகளுடன்) இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றார். இதேநேரம் மூன்றாம் இடத்தில் தென்னாபிரிக்க அணியின் எய்டன் மார்க்ரமும், நான்காம் ஐந்தாம் இடங்களில் முறையே பாகிஸ்தானின் மொஹமட் ரிஸ்வான் மற்றும் இந்தியாவின் விராட் கோலி ஆகியோர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

<<மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>