மாலைதீவுகளில் CAVA 20 வயதின் கீழ் மகளிர் கரப்பந்தாட்ட தொடர்

CAVA U-20 Women Volleyball Championship 2024

2

மாலைதீவுகளில் 2024ஆம் ஆண்டு மகளிர் (20 வயதின் கீழ்ப்பட்டோருக்கான) கரப்பந்தாட்ட தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.

>> இலங்கை இளம் கூடைப்பந்து அணிக்கு வெற்றி

இலங்கை உட்பட கஷகஸ்தான், நேபாளம் மற்றும் மாலைதீவுகள் ஆகியவற்றின் மகளிர் கரப்பந்தாட்ட அணிகள் பங்கெடுக்கும் இந்த தொடர் நாளை 18ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை மாலைதீவுகளின் மாலே நகரில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்து.

அதேநநேரம் இந்த தொடரில் பங்கெடுக்கும் இலங்கை கரப்பந்தாட்ட அணியானது நேற்று (16) மாலைதீவுக்கு பயணமாகியதுடன், இலங்கை அணியினை சதூரி பூர்னிமா தலைவராக வழிநடாத்துகின்றார். அத்துடன் இலங்கை அமில எரங்க விஜேபால நியமனம் செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<