கிரிகெட்டின் உயரிய அங்கீகாரமான ஐசிசி Hall of Fame இனுள் உள்வாங்கப்பட்ட முதல் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன். 1992 தொடக்கம் 2011 வரை கிரிகெட்டிற்காக ஆற்றிய சேவையினை கருத்திற் கொண்டே இந்த உயரிய கௌரவம் அவருக்கு அளிக்கப்பட்டது.
முரளிக்கு முன் இலங்கை அணியில் பல ஜாம்பவான்கள் ஆடியிருந்தாலும் முரளிதரன் கிரிகெட்டிற்கு வழங்கியது ஒப்பீட்டளவில் அளப்பரியது. சச்சின் டெண்டுல்கரிற்கு கூட 2019 இல் தான் குறித்த அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் முரளி 2016 இலேயே இதை பெற்றுகொண்டார்.
உலகிற்கு மறைந்திருந்த சனத் மற்றும் டில்ஷான்
பந்துவீச்சாளர்களாக அறிமுகமாகி பின்னர் கிரிகெட் உலகின் துடுப்பாட்ட ஜாம்பவான்கள் என
இவ்வாறு ஐசிசி கௌரவப்படுத்தும் அளவு மிக முக்கியமான ஒரு வீரர் முரளி. கிரிகெட் வரலாறு நெடுகிலும் முரளியின் பெயர் உச்சத்தில் இருக்க போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அவ்வாறான யாரும் நெருங்க முடியாத ஒரு சாதனையாளன் முத்தையா முரளிதரன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகள் என இரண்டு வகைகளிலும் இமாலய இலக்கை தன்னை பின்தொடர இருப்பவர்களிற்கு விட்டு வைத்துவிட்டு Catch me if You Can என தனது கண்களை உருட்டிய வண்ணம் மெல்லிய புன்னையுடன் Leading Wicket Taker எனும் அரியாசனத்தில் வீற்றிருக்கிறார் முரளி.
இவ்வாறான சாதனைகளின் நாயகன் தனது அணிக்காக, தனது அணியின் வெற்றியிற்காக எவ்வளவு பங்களிப்பு செய்தார்? எத்தனை போட்டிகளை வெற்றிபெற செய்தார்?
தனது சாதனைகளை அணியின் வெற்றிக்கான துருப்பு சீட்டாக மாற்றினாரா முரளி?
கடந்த 1992 தொடக்கம் 2010 வரை முரளி 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். இந்த 18 வருட Span இல் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த 800 விக்கெட்டுக்களில் 427 (53.38%) விக்கெட்டுகளை வெற்றிக்கான துருப்பு சீட்டாக பயன்படுத்தி இலங்கை அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் அதி கூடிய பங்களிப்பை வழங்கியுள்ளார் இந்த சுழல் ஜாம்பவான்.
அதாவது, முரளி ஆடிய 131 போட்டிகளில் மூன்று அல்லது மூன்றிற்கு அதிகமான விக்கெட்டுகளை குறைந்தது ஏதாவது ஒரு இன்னிங்ஸிலேனும் வீழ்த்திய போட்டிகளின் எண்ணிகை 107 ஆகும். இவற்றுள் 49.5 வீதமான போட்டிகளை (53 போட்டிகள்) இலங்கை அணி வெற்றுபெற்றது. இதேபோல், வெற்றி + சமன் செய்யப்பட்ட போட்டிகளை கருத்திற்கொண்டால் இலங்கை அணி 78 போட்டிகளை 72.9 எனும் விகிதத்தில் வெற்றி பெற்றுள்ளது அல்லது சமன் செய்துள்ளது. இந்த வெற்றிகளிற்காக 427 விக்கெட்டுகளை வீழ்த்தினார் முரளிதரன்.
குறிப்பிட்ட அந்த 107 போட்டிகளுள் இலங்கை அணி 43 போட்டிகளை இலங்கைக்கு வெளியில் ஆடியது. அவற்றுள் 14 போட்டிகளை வெற்றிபெறவும் (32.6%), 11 போட்டிகளை சமன் செய்யவும் (25.6%) முரளி காரணமாக இருந்தார். வெளிநாடுகளில் வீழ்த்திய 301 விக்கெட்டுகளுள் நாற்பது வீதமான விக்கெட்டுகளை 19.1 எனும் சராசரியில் இலங்கை அணியின் வெற்றிக்கான பங்களிப்பாக முரளி வழங்கினார்.
ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை அதிக முறை வீழ்த்திய வீரரும் முரளி தான். முரளி பெற்ற 67 ஐந்து விக்கெட் பிரதிகளில் 42 (62%) போட்டிகளை வெற்றிபெற்றது இலங்கை அணி.
முரளியின் பந்துவீச்சு முறையற்றது என ஆஸ்திரேலியா உற்பட பல அணிகள் முறைப்பாடு செய்து பல முறை முரளியின் பந்துவீச்சு பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டது. அவை அனைத்திலும் வெற்றிபெற்று 19 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை சுழல் பந்துவீச்சால் ஆட்டிப்படைத்தவர் முரளி.
இறுதிப் போட்டியில் இறுதிப் பந்தில் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்கள்
கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை விக்கெட்டுக்கள்
சுழல்பந்து ஜாம்பவான்கள் எனும்போது கட்டாயம் முன்னாள் ஆவுஸ்திரேலிய வீரர் சேன் வோர்னின் பெயர் இருக்கும். முரளிக்கு பின்னர் அதிக பந்துவீச்சு தொடர்பான சாதனைகளில் இடம் பிடித்திருப்பதும் வோர்ன் தான். வோர்ன் வீசிய பந்துகளின் எண்ணிக்கையை விட முரளி வீசிய பந்துகளின் எண்ணிக்கை அதிகம் எனினும் Wicket per ball ratio ஆனது வோர்ன் ஐ விட முரளியிற்கு அதிகம். அதேபோல் Run per ball ratio ஆனது முரளியை விட வோர்னிற்கு அதிகம்!
முரளி அதிகமான விக்கெட்டுகளை இலங்கையிலேயே கைப்பற்றி இருந்தார். வோர்ன் அதிக விக்கெட்டுகளை ஆசியாவிற்கு வெளியில் கைப்பற்றி இருந்தார். எனினும் விக்கெட்டுகளை தகர்ப்பது அவ்வளவு இலேசான காரியம் அல்ல. முரளி, வோர்ன் இரண்டுபேரும் “The Greatest of all time” தான்!
முரளியின் சர்வதேச ஒருநாள் தரவுகளின்படி 341 போட்டிகளில் 66 போட்டிகளில் மூன்று அல்லது மூன்றிற்கு அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த 66 போட்டிகளில் 50 போட்டிகளை இலங்கை அணி வெற்றிபெற முரளியின் பந்துவீச்சு பிரதான காரணமாக அமைந்தது. இதில் வெற்றிபெற்ற 50 போட்டிகளில் 36 வெற்றிகள் வெளிநாடுகளில் ஆடி பெற்றவை.
இந்த 66 போட்டிகளின்படி முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய போது 99 விக்கெட்டுகளை 37.3 எனும் சராசரியில் 3.35 எனும் ஓட்ட வேகத்தில் ஓட்டங்களை விட்டுக் கொடுத்தும் (economy) பெற்றார். அதேபோல் இரண்டாம் இன்னிங்ஸில், அதாவது எதிரணி ஓட்ட இலக்கை விரட்டும் போது 136 விக்கெட்டுகளை 8.0 எனும் சராசரியில் 3.2 எனும் economy இலும் வழங்கி இருக்கிறார் முரளி.
இவ்வாறு முரளி தனது சொந்த சாதனைகளை அணியின் வெற்றிக்கு சதாகமாக மாற்றினார். இந்த ஆக்கத்தில் முரளி மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை பெற்ற விக்கெட்டுகளை வைத்தே அணியின் வெற்றிக்கான பங்களிப்பு கணிக்கப்பட்டது.
எனினும், முரளி பல போட்டிகளில் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் வீழ்த்தியிருக்கின்றார். இவற்றில் பல விக்கெட்டுகள் இக்கட்டான தருனத்தில் பெறப்பட்டவையாக இருக்கும் அல்லது இலங்கையை தோல்வியின் விளிம்பில் இருந்து மீட்க பெறப்பட்டவையாக இருக்கும். இன்னும் பல குறுகிய இலக்கு (Low scoring matches) கொண்ட போட்டிகளில் தனது அதிரடி பந்துவீச்சில் ஓட்டம் பெறும் வீதத்தை கட்டுபடுத்தி வெற்றிக்கு வழி வகுத்தும் இருக்கிறார் முரளிதரன்.
மேலே சொன்ன இலக்கங்கள், தரவுகளை தாண்டி முரளியின் பல சாதனைகள் உள்ளன. அவை அனைத்தும் இலங்கை அணியின் வெற்றிக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கும்.
தன்னுடைய சாதனைகளை அணியின் வெற்றியின் சூத்திரமாக மாற்றியதனாலும், கிரிக்கெட் உலகில் யாரும் எட்ட முடியாத ஒரு பெயராக மாறியதாலும் தான் ஐசிசி இலங்கையின் முதல் Hall of Fame வீரராக முரளியை தேர்ந்தெடுத்திருக்க கூடும்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க