மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாவான கரீபியன் பிரிமியர் லீக் (CPL) T20 தொடரின் 7ஆவது அத்தியாய இறுதிப்போட்டியில் பார்படோஸ் ட்ரைடென்டஸ் அணி, கயானா அமேசன் வோரியர்ஸ் அணியினை 27 ஓட்டங்களால் தோற்கடித்து இரண்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.
பாகிஸ்தானில் இலங்கை அணி செயற்பட்டவிதம் சிறப்பாக இருக்கின்றது – ருமேஷ் ரத்நாயக்க
உலகின் முதல் நிலை T20 அணியான பாகிஸ்தானுக்கு எதிராக இளம் வீரர்களை மாத்திரம்….
இந்த ஆண்டுக்கான (2019) கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் போட்டிகள் யாவும் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து நடைபெற்றுவந்திருந்தன. தொடர்ந்து இத்தொடரின் பிளே ஒப் சுற்றுக்கு அமைவாக பார்படோஸ் ட்ரைடென்ஸ் அணியும், கயானா அமேசன் வோரியர்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.
கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் இம்முறைக்கான இறுதிப்போட்டியில் ஏற்கனவே இரண்டு தடவைகள் தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி ஒரு தடவை சம்பியன் பட்டம் வென்ற பார்படோஸ் ட்ரைடென்டஸ் அணி, நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய கயானா அமேசன் வோரியர்ஸ் அணியின் சவாலை எதிர்கொள்ள தயராகியிருந்தது.
பின்னர் ட்ரினிடாட் பிரையன் லாரா மைதானத்தில் இறுதிப்போட்டி சனிக்கிழமை (12) ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பார்படோஸ் ட்ரைடென்டஸ் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக தேர்வு செய்து கொண்டார்.
இதன்படி, முதலில் துடுப்பாடிய பார்படோஸ் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்டவீரராக வந்த ஜோன்சன் சார்ள்ஸ் சிறந்த துவக்கத்தினை வழங்கினார். மொத்தமாக 22 பந்துகளை எதிர்கொண்ட ஜோன்சன் சார்ள்ஸ் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இதன் பின்னர் பார்படோஸ் தரப்பு அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்த போதிலும், 7ஆம் இலக்கத்தில் களம் வந்த ஜொனதன் கார்டர் தனது அதிரடியான அரைச்சதம் மூலம் தனது தரப்பிற்கு வலுச்சேர்த்திருந்தார்.
ஜொனதன் கார்டரின் அதிரடியோடு பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
பார்படோஸ் அணி சார்பில் ஜொனதன் கார்டர், 27 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
மறுமுனையில், கயானா அமேசன் வோரியர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில், இம்ரான் தாஹிர், பென் லோலின், ரொமாரியோ செபர்ட் மற்றும் கீமோ போல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 172 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு கயானா அமேசன் வோரியர்ஸ் அணி துடுப்பாடியது.
கயானா அணிக்காக ஆரம்ப துடுப்பாட்டவீரராக வந்த பிரன்டன் கிங் சிறந்த ஆரம்பத்தை காட்டிய போதிலும், அவ்வணியின் ஏனைய துடுப்பாட்டவீரர்கள் ஜொலிக்க தவறினர். இதனால், கயானா அமேசன் வோரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.
கயானா அணியின் துடுப்பாட்டம் சார்பில் பிரன்டன் கிங் 33 பந்துகளில் 4 பௌண்டரள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 43 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இதேநேரம், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் ரேய்மன் ரெபர் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்க, ஹர்ரி கேனி மற்றும் ஏஷ்லி நேர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
Video – பாகிஸ்தானில் பிரகாசித்த இளம் வீரர்களுக்கு ஆஸி. தொடரில் இடம் கிடைக்குமா? Cricket Kalam 33
பாகிஸ்தானில் இளம் இலங்கை அணி பெற்ற வரலாற்று தொடர்…
இப்போட்டியில் தோல்வியினை தழுவியிருக்கும் கயானா அமேசன் வோரியர்ஸ் அணி, நான்காவது தடவையாக கரீபியன் பிரிமியர் லீக் தொடர் சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்திருக்கின்றது.
போட்டியின் நாயகனாக பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணியின் ஜொனதன் கார்டர் தெரிவாக, தொடர் நாயகன் விருது ஹேய்மன் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணியின் மற்றைய வீரரான ஹெய்டன் வேல்ஸிற்கு வழஙகப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் – 171/6 (20) ஜொனதன் கார்டர் 50(27), ஜோன்சன் சார்ள்ஸ் 39(22), இம்ரான் தாாஹிர் 24/1(4)
கயானா அமேசன் வோரியர்ஸ் – 144/9 (20) பிரன்டன் கிங் 43(33), ரேய்மன் ரெபர் 24/4(4), ஏஷ்லி நேர்ஸ் 17/2(4), ஹர்ரி கேனி 24/2(4)
முடிவு – கயானா அமேசன் வோரியர்ஸ் அணி 27 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<