இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு அணியின் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும். அதேபோல, கிரிக்கெட்டை பொறுத்தவரையில் வெற்றிகளை போலவே தோல்விகளையும் நாம் ஏற்றுகொள்ள வேண்டும் எனவும், இந்த தோல்வியை அரசியல் ரீதியாக உற்று நோக்குவது தவறு எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.
[rev_slider LOLC]
மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் மெதிவ்ஸ், அசேல, திசர
இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் …
இதேநேரம், இலங்கை அணி புதிய பயிற்றுவிப்பாளரின் கீழ் செயற்பட்டு வருகின்ற நிலையில், வெற்றிகளைப் போல தோல்விகளையும் சந்தித்து வருகின்றது. எனினும், தொடர்ந்து தோல்விகளை சந்தித்தால் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கியாவது அணியை வெற்றி பெறச் செய்வோம் என்பதை பங்களாதேஷ் அணி மறந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தம்புள்ளை விளையாட்டரங்களில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை மற்றும் வருமானம் குறித்தும், இலங்கை அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்ற காரணத்தினால் அமைச்சர் பதவி விலகுவாரா அல்லது தெரிவுக் குழு பதவி விலகுமா என்ற கேள்விகளை எழுப்பிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
”தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படுவதில்லை. இதுவரை 51 ஒரு நாள் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. 51 பெண்கள் கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெற்றுள்ளன. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 2 டெஸ்ட் போட்டிகளும், 4 ஒரு நாள் போட்டிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தப் போட்டிகளின் மூலம் 2 கோடியே 94 இலட்சத்து 56 ஆயிரத்து 270 ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது” என்றார்.
மழையின் உதவியோடு மேற்கிந்திய தீவுகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி
ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் மழை…
இதேநேரம், இலங்கை அணி குறித்து அமைச்சர் கருத்து வெளியிடுகையில், ”இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு அணியின் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும். எந்த அணியாக இருந்தாலும் அல்லது கட்சியாக இருந்தாலும் வெற்றியோ, தோல்வியோ அதற்கு தலைவர் தான் பொறுப்பு கூற வேண்டும்.
எனினும், இந்த வெற்றி தோல்விகள் குறித்து நாம் கலந்துரையாடி வருகின்றோம். இலங்கை கிரிக்கெட் அணி தற்போது புதிய பயிற்றுவிப்பாளரின் கீழ் செயற்பட்டு வருகின்றது.
இதில் வெற்றிகளைப் போல தோல்விகளையும் சந்தித்து வருகின்றது. வெற்றிகளை ஏற்றுக்கொள்வதைப் போலவே தோல்விகளையும் நாம் ஏற்றுகொள்ள வேண்டும். ஒரு அணி தொடர்ந்து வெற்றிகளை பெற்றுக் கொள்வதில்லை. கிரிக்கெட் விளையாட்டின் இயல்பும் இதுதான். இதற்கு யாரை பதவி நீக்குவது, தக்கவைத்துக் கொள்வது என்பது தொடர்பில் யோசிக்காமல் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் முன்செல்ல வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.