டி-20 கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் அதிக ஓட்டங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பொண்டிங்கின் 14 வருடகால சாதனையை கனடா வீரர் ரவீந்தர்பால் சிங் முறியடித்துள்ளார்.
வேகப் பந்துவீச்சாளராக மாறிய மொயின் அலி
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான..
அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணப் போட்டிக்கான அமெரிக்கா வலயத்துக்கான தகுதிகாண் போட்டித் தொடர் தற்போது பெர்முடாவில் நடைபெற்று வருகின்றது. இதில் கனடா, ஐக்கிய அமெரிக்கா, பெர்முடா மற்றும் கெய்மன் தீவுகள் உள்ளிட்ட நான்கு அணிகள் பங்குபற்றி வருகின்றன.
இந்தத் தொடரின் 2ஆவது லீக் ஆட்டத்தில் கனடா அணி கெய்மன் தீவுகள் அணியை எதிர்கொண்டது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை எடுத்தது.
இதில் கனடா அணிக்காக தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய ரவீந்தர்பால் சிங், 48 பந்துகளில் ஆறு பௌண்டரிகள், 10 சிக்ஸர்களுடன் 101 ஓட்டங்களை அதிகபட்சமாகக் குவித்தார்.
இதன்மூலம் டி-20 கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும், அறிமுகப் போட்டியில் சதமடித்த முதல் வீரராகவும் அவர் புதிய 2 சாதனைகளைப் படைத்தார்.
டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான்
அண்மையில் நிறைவுக்கு வந்த சர்வதேச கிரிக்கெட்..
அத்துடன், சர்வதேச டி-20 போட்டியில் 4ஆவது இலக்கத்தில் களமிறங்கி சதமடித்த 5ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட அவர், 4ஆவது இலக்கத்தில் விளையாடி அதிக சிக்ஸர்களை விளாசிய (10 சிக்ஸர்கள்) நியூசிலாந்து வீரர் கொரி அண்டர்சனின் சாதனையையும் சமப்படுத்தியிருந்தார்.
இதற்குமுன் அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பொண்டிங் டி-20 அறிமுகப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 2005இல் 98 ஓட்டங்களைக் குவித்தார். இதன்படி, ரிக்கி பொண்டிங் சாதனையை 14 வருடத்திற்குப் பிறகு ரவீந்தர்பால் சிங் முறியடித்துள்ளார்.
இதேநேரம், டி-20 அரங்கில் அறிமுகப் போட்டியில் விளையாடிய அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் 89 ஓட்டங்களையும் (2009), கனடாவைச் சேர்ந்த ஹிரால் பட்டேல் 88 ஓட்டங்களையும் (2010), குவைத்தைச் சேர்ந்த அட்னான் இட்ரீஸ் 79 ஓட்டங்களையும் (2019) அடித்துள்ளனர்.
ஒரு வருட தடைக்குள்ளான மொஹமட் ஷெஹ்சாத்
அண்மையில் நிறைவுக்கு வந்த உலகக்கிண்ண தொடரிலிருந்து.
அண்மையில் நிறைவுக்கு வந்த குளோபல் டி-20 தொடரில் யுவ்ரஜ் சிங் தலைமையிலான டொரன்டோ நேஷனல்ஸ் அணிக்காக விளையாடியிருந்த ரவீந்தர்பால் சிங், 7 இன்னிங்ஸ்களில் விளையாடி 54 ஓட்டங்களைக் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, குறித்த போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கெய்மன் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 112 மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. போட்டியின் ஆட்டநாயகனாக ரவீந்தர்பால் சிங் தெரிவானார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<