கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான துறைகள் பாதிக்கப்பட்டன. தற்போது இந்தியா உட்பட உலக நாடுகளில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து பரிசோதனைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
மனிதர்களுக்கு நடத்தப்பட்ட முதல் கட்ட பரிசோதனை வெற்றி பெற்றிருப்பதாக ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
T20 உலகக் கிண்ணம் ஒத்திவைப்பு: ஐ.சி.சி அறிவிப்பு
அதே நாளில் மற்றொரு அறிவிப்பும் வெளியானது. அதாவது, இந்த வருடம் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த T20i உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதாக ஐ.சி.சி அறிவித்தது.
ஐசிசி இன் இந்த அறிவிப்புக்காகத்தான் பல மாதங்களாக இந்திய கிரிக்கெட் சபை காத்திருந்தது. கொவிட் – 19 வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் இன்னும் இரத்து செய்யப்படவில்லை.
கொரோனா தாக்கம் குறையும் நேரத்தில் தொடரை நடத்தலாம் என்றால், அதற்கு இத்தனை காலம் தடையாக இருந்தது T20i உலகக் கிண்ணம் குறித்த அறிவிப்புதான்.
எனவே T20i உலகக் கிண்ணத்தை ஒத்திவைப்பதாக ஐ.சி.சி அறிவித்த உடனேயே, ஐ.பி.எல் தொடருக்கான வேலைகளில் முழு வேகத்துடன் BCCI களமிறங்கிவிட்டது.
2000 ஆம் ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமான வீரர்களுக்கெல்லாம் தற்போது 35 வயது கடந்து விட்டது. ஒவ்வொருவராக ஓய்வு பெற்று வருகிறார்கள்.
அந்த வரிசையில் இவ்வருட இறுதியில் நடைபெறவிருந்த T20i உலகக் கிண்ணத் தொடர் முடிந்தவுடன் ஓய்வை அறிவிக்க காத்திருந்த வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
Video – இலங்கை இரசிகர்களுக்கு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் | Cricket Galatta Epi 30
குறிப்பாக, கொவிட் – 19 வைரஸ் காரணமாக முறையே 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் நடைபெறவிருந்த T20i உலகக் கிண்ணத் தொடர்களை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு ஐசிசி ஒத்தி வைத்துள்ளது.
இதனால் மீண்டும் சர்வதேச போட்டிகளில் பல முன்னணி வீரர்கள் விளையாட வேண்டும் என்ற ரசிகர்கள், சக வீரர்களின் கனவு தற்போது கேள்விக்குறியாகியுள்ளதுடன், அந்த வீரர்களை அடுத்த T20i உலகக் கிண்ணத்தில் காணக் கிடைக்குமா என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அவ்வாறு 2020 T20i உலகக் கிண்ணத்தை எதிர்பார்த்து ஓய்வினை அறிவிக்கக் காத்திருந்த முன்னணி வீரர்கள் தொடர்பில் இந்தக் கட்டுரை ஆராயவுள்ளது.
லசித் மாலிங்க
இலங்கை அணியின் அனுபவமிக்க நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை விளையாடி வருகிறார். இவருக்கு தற்போது 37 வயதாகிவிட்டது ஏற்கனவே பல சாதனைகள் படைத்தவர்.
T20i போட்டிகளில் மட்டும் 107 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள மாலிங்க, அதிக T20i விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய உலகின் முதலாவது வீரராகவும் வலம் வருகின்றார்.
இலங்கை T20i அணியின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்ற மாலிங்க, இவ்வருடம் நடைபெறவிருந்த T20i உலகக் கிண்ணத்துடன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
40 வீரர்களுடன் மீண்டும் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை
இலங்கை அணிக்காக மாலிங்க பெற்றுக் கொடுத்த வெற்றிகள் ஏராளம் ஏராளம். ஒருநாள், T20i போட்டிகளில் சாதனைகள் பல படைத்தவர்.
அதிலும் குறிப்பாக, கடந்த வருடம் நடைபெற்ற நியூசிலாந்து அணியுடனான T20i போட்டியில் அடுத்தடுத்து நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்திய மாலிங்க, அதே வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை அணிக்காக அபாரமாக பந்துவீசி அந்த அணிக்கு சம்பியன் பட்டத்தையும் வென்று கொடுக்க காரணமாக இருந்தார்.
கொவிட் – 19 வைரஸ் காரணமாக எந்தவொரு போட்டியிலும் விளையாடாத லசித் மாலிங்க, கடந்த மாதம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட வதிவிட பயிற்சி முகாமிலும் கலந்துகொள்ளவில்லை.
2011 உலகக் கிண்ண தோல்விக்கான காரணத்தை கூறும் மெதிவ்ஸ்
எனவே, மாலிங்க தொடர்ந்து தனது திறமையையும், உடற்தகுதியையும் தக்கவைத்துக் கொண்டு சிறப்பாக பந்துவீசுவாரா என்பதை இந்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரின் மூலம் பார்க்க முடியும்.
அவ்வாறு அவரால் சிறப்பாக செயற்பட முடியுமாயின், நிச்சயம் அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20i உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை வழிநடத்தாவிட்டாலும், இலங்கை அணிக்காக விளையாடுவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது.
மகேந்திர சிங் டோனி
ஏற்கனவே 39 ஆவது வயதை எட்டியுள்ள MS டோனி, இந்த வருடT20i உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் T20i உலகக் கிண்ணத் தொடர் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அப்போது 40 ஆவது வயதை எட்டும் டோனிக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் எது எப்படியோ, இம்முறை ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக நிச்சயம் டோனி களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
இந்திய வீரர்களுக்கு அவுஸ்திரேலியாவின் உறுதியான உத்தரவு
சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு 3 முறை ஐ.பி.எல் சம்பியன் பட்டங்களை வென்று கொடுத்துள்ள டோனியின் தலைமைத்துவமும், ஆட்டத் திறனும் இம்முறை ஐ.பி.எல் தொடரில் பிரகாசிக்கும் பட்சத்தில் அவருக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.
ஆனால் பெரும்பாலும் அடுத்த வருடம் டோனிக்கு 40 வயதாகி விடும் என்பதால் அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20i உலகக் கிண்ணத் தொடர் முடிந்தவுடன் ஓய்வு பெற்று விடுவார் என்றே தெரிகிறது.
கிறிஸ் கெயில்
T20i போட்டிகளில் அதிரடி ஆட்டக்காரரும், சிக்ஸர் மன்னனுமான மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த கிறிஸ் கெயில், இதுவரை 58 டி20 போட்டிகளில் விளையாடி 1627 ஓட்டங்களை குவித்துள்ளார் இவருக்கு தற்போது 40 வயதாகிவிட்டது.
உலகின் பல்வேறு பாகங்களில் நடைபெறுகின்ற ஐ.பிஎ.ல் உள்ளிட்ட T20i தொடரில் இவர் விளையாடினாலும், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20i உலகக் கிண்ணத்தில் விளையாடுவது மிகவும் குறைவு என்றே கருதப்படுகிறது.
ஆகஸ்டில் நடைபெறவுள்ள கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர்
உள்ளூர் மற்றும் சர்வதேசம் என 400 T20i போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெயில், 22 சதங்களுடன் 13, 296 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இம்ரான் தாஹிர்
தனது 30 ஆவது வயதில் தென்னாப்பிரிக்க அணிக்காக அறிமுகமான இவர் கடந்த 7 வருடங்களாக சுழல்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். 107 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 173 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 58 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்காக தொடர்ந்து திறமையை வெளிப்படுத்தி வருகின்ற இவருக்கும் வயதாகிவிட்டதால் அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20i தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டேல் ஸ்டெயின்
கடந்த ஆறு வருடங்களாக காயம் காரணமாக பெரிதாக இவரால் விளையாட முடியவில்லை. அவ்வப்போது வந்து ஒரு சில போட்டிகளில் விளையாடினாலும் காயம் காரணமாக மீண்டும் அணியில் இருந்து வெளியேறி விடுகிறார்.
பாகிஸ்தான் அணியில் நிராகரிப்பு ஏமாற்றம் அளிக்கிறது – இம்ரான் தாஹிர் வேதனை
தற்போது 37 வயதான இவர் 47 T20i போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்த வருடம் இவருக்கு 38 வயதாகி விடும். எனவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20i உலகக் கிண்ணத்துக்கு முன் ஓய்வு பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப் டு பிளெசிஸ்
தென்னாபிரிக்க அணியின் அனுபவமிக்க வீரர்களில் ஒருவராக உள்ள பாப் டு பிளெசிஸ், ஒரு தலைவராக கடந்த காலங்களில் பின்னடைவை சந்தித்து வந்த காரணத்தால் அப்பதவியை இராஜினாமாச் செய்தார்.
மறுபுறத்தில் துடுப்பாட்டத்திலும் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்ற அவருக்கு அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20i உலகக் கிண்ணததில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதென்பது அரிதாகவே கருதப்படுகின்றது.
வருட T20 உலகக் கிண்ணத்தில் விளையாட இருந்த டி. வில்லியர்ஸ்
எனினும், இம்முறை ஐ.பி.எல் தொடரில் பிரகாசிக்கும் பட்சத்தில் தென்னாபிரிக்கா அணியில் அவருக்கான இடம் உறுதிசெய்யப்படும் என்பதில் சந்தேகம் கிடையாது.
மொஹமட் ஹபீஸ்
பாகிஸ்தான் அணியின் அனுபவமிக்க சகலதுறை வீரரான மொஹமட் ஹபீஸுக்கு 39 வயதாகிவிட்டது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த அவர், இவ்வருடம் நடைபெறவிருந்த T20i உலகக் கிண்ணத்துடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு விடைகொடுக்க காத்திருந்தார்.
எனினும், T20i உலகக் கிண்ணம் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க அவர் விரைவில் ஓய்வினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சொஹைப் மலிக்
38 வயதான சொஹைப் மலிக், பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் மற்றும் T20i போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றார்.
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் தொடர்ந்து திறமையை வெளிப்படுத்தி வருகின்ற காரணத்தினாலும், அவருடைய அனுபவம் காரணமாகவும் தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்து வருகின்ற சொஹைப் மலிக்கிற்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணியுடனான T20i தொடர் பாகிஸ்தான் அணியில் இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
Video – டிவில்லியர்ஸ் Comeback எப்போது? |Sports RoundUp – Epi 124
டுவைன் பிராவோ
மேற்கிந்திய தீவுகள் அணியின் அனுபவமிக்க சகலதுறை வீரர்களில் ஒருவரான டுவைன் பிராவோ, ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றாலும், உலகளவில் நடைபெறுகின்ற பல T20i லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி தனது திறமையை நிரூபித்து வருகின்றார்.
37 வயதான பிராவோ, மேற்கிந்திய தீவுகள் அணிக்காக மீண்டும் T20i போட்டிகளில் விளையாடுவதற்கு தீர்மானித்தாலும், அவருக்கு வாய்ப்பு கிடைப்பதும் மிகவும் அரிதாகவே உள்ளது.
எது எவ்வாறாயினும், இம்முறை நடைபெறவுள்ள கரீபியன் ப்ரீமியர் லீக் மற்றும் ஐ.பி.எல் தொடர்களில் திறமைகளை அவர் வெளிப்படுத்தினால் நிச்சயம் அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20i தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சகிப் அல் ஹசன்
பங்களாதேஷ் அணியின் அனுபவமிக்க வீரரான 33 வயதுடைய சகிப் அல் ஹசன், கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்ததுடன், அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
நான்கு மாதங்களின் பின் பயிற்சிகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்
எனினும். சூதாட்ட தரகர்கள் தன்னை அனுகியதை ஐ.சி.சி இன் ஊழல் தடுப்பு பிரிவுக்கு அறிவிக்காத குற்றச்சாட்டில் அவருக்கு இரண்டு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டது. இதன்படி, அவருடைய போட்டித் தடை 2021 இல் நிறைவுக்கு வருவதால், அவரால் 2021 T20i உலகக் கிண்ணத்தில் விளையாட முடியுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறுதியாக…
எனவே இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட அனைத்து வீரர்களும், கிரிக்கெட் உலகில் தமக்கென் தனிப் பெயரை கொண்டவர்களாகவும், பல சாதனைகளை படைத்தவர்களாகவும் வலம்வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களது பங்களிப்பு அந்தந்த அணிக்கு மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கியிருந்தது என்றால் மிகையாகாது.
எது எவ்வாறாயினும், எந்தவொரு விளையாட்டானாலும் ஓய்வு எள்பது தவிர்க்க முடியாத விடயமாகும். இது கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டும் விதிவிலக்கல்ல.
ஆகவே இந்த நட்சத்திர வீரர்களின் பிரியாவிடை போட்டியானாது கிரிக்கெட் ரகிசகர்களுக்கு நிச்சயம் கவலையை ஏற்படுத்தும் என்பதுடன், கிரிக்கெட் உலகிற்கு மிகப் பெரிய இழப்பாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க