பார்வைத்திறன் உங்களை சிறந்த பந்துவீச்சாளராக மாற்றுமா??

Vision Care தரும் Sports Vision மூலம் உங்கள் திறனை உயர்த்துங்கள் - பாகம் 3 கிரிக்கெட் (பந்துவீச்சு)

284

கிரிக்கெட்டில் கலைப்படைப்பாக இருக்கும் பந்துவீச்சு, உடற்பொறிமுறை மற்றும் படைப்பாற்றலின் அற்புதமான கோர்வை என கடந்த காலங்களில் விரிவடைந்திருக்கின்றது. 

பார்வைத்திறனுடன் துடுப்பாட்டத்தினை மேம்படுத்தல்

கிரிக்கெட் எப்போதுமே இலங்கையர்களின் விருப்பமான பொழுதுபோக்காக இருப்பதோடு, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பலரும் கடந்த ஆண்டுகளில் சர்வதேச அரங்கில் பெரும் உயரத்தை எட்டியிருக்கின்றனர். அதில் உலக அரங்கில் இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் களத்தடுப்பாளர்கள் அனைவராலும் போற்றப்பட்ட போதும் பந்துவீச்சாளர்களான முத்தையா முரளிதரன், லசித் மாலிங்க போன்றவர்களுக்கு விஷேடமான இடம் இருக்கின்றது என்று நீங்கள் கூற முடியும். 

பந்துவீச்சு என்பது ஒரு கலை, இதில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமான விடயமாக இருப்பதோடு அதற்கு நிறைய பயிற்சிகளும், பொறுமையும் அவசியம். பந்துவீச்சில் தேர்ச்சி பெற நினைப்பவர் எருதினைப் போல திடமாகவும், ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் ஈடுபவர்களைப்  போல சுறுசுறுப்பாகவும், கழுகு போன்ற துல்லியத்தன்மை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். 

பெரும்பாலாக பந்துவீச்சாளர்கள் அதிக கவனம் செலுத்தும் பகுதிகளாக இரண்டு விடயங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று அவர்களின் உடல்களை சிறந்த நிலையில் வைத்திருப்பதாக இருப்பதோடு மற்றையது நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பந்துகளை வலைகளில் வீசி தங்களது பந்துவீச்சுத்திறனை அதிகரிப்பதாக காணப்படுகின்றது. ஆனால் அவர்கள் கவனம் செலுத்த தவறிய விடயம் ஒன்றும் காணப்படுகின்றது. அது பந்துவீச்சாளர்கள் தங்களது துல்லியத்தினை (Precision) விருத்தி செய்யத் தவறுவதாகும். இங்கே பந்துவீச்சுத் துறையில் குறிப்பிடப்படும் துல்லியமானது ஒருவரின் பார்வை மற்றும் அவரின் மூளை என்பவற்றுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றது.

Sports Vision இல் பயன்படும் பயிற்சி முறைகள்

அந்தவகையில் நல்ல பந்துவீச்சாளராக இருக்கும் உங்களை மிகவும் சிறந்த ஒரு பந்துவீச்சாளராக மாற்றுகின்ற விடயங்கள் Vision Care நிறுவனத்தின் Sports Vision பிரிவு மூலம் வழங்கப்படுகின்றது. பந்துவீச்சாளராக இருக்கும் நீங்கள் பந்துவீச்சின் போது உங்கள் துல்லியத்தன்மையினை மேம்படுத்த கீழுள்ள பார்வை ஆற்றல்களை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.  

  • இலக்குகளை மாற்றும் போது திருத்தமான கை-கண் ஒருங்கிணைவு (Eye-Hand Coordination – Accurate and fast hand reaction to changing targets)  

பந்துவீச்சில் அல்லது கிரிக்கெட்டில் இலக்கு ஒன்று எப்போதும் ஒரு நிலையான விடயம் அல்ல. கிரிக்கெட்டில் இலக்கு என்பது எப்போதும் மாறும் விடயமாக காணப்படுகின்றது. இந்த மாற்றங்கள் நடப்பது மைதானத்தில் நடக்கும் வேறு விடயங்களுக்காக அல்ல உங்களது  தலையானது எப்போதும் இயக்கத்தில் இருப்பதனாலேயே இவை நடைபெறுகின்றன. 

பந்துவீச்சின் போது உடலின் ஊடான கைகளின் அசைவு காரணமாக, பந்துவீசும் போது நீங்கள் கண்களால் குறுகிய நேரத்தில் இலக்கினை  நினைத்து மனதினால் உறுதிப்படுத்திக்கொள்வதோடு, குறித்த கணநேரத்தில் நீங்கள் கண்களால் இலக்கினை பார்க்காமலேயே பந்தினை வீசுகின்றீர்கள். 

அதேநேரம் குறித்த இந்த தருணத்தில், வேறு விடயங்களும் நடக்கக்கூடும். உதாரணமாக, நீங்கள் பந்துவீசுகின்ற நிலை மாற முடியும். எனவே, உங்கள் இலக்கின் நிலை இந்த சந்தர்ப்பத்தில் மாறுகின்றது. எனவே, இப்போது உங்கள் கண்களால் நீங்கள் காண்கின்ற புதிய இலக்கின் நிலைக்கு ஏற்றவாறு புதிய மாற்றத்தை உங்கள் உடல் எப்படி விரைவாக ஒருங்கமைத்து செயற்படுகின்றதே முக்கிய விடயமாக காணப்படுகின்றது. 

எனவே, இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் கண்-கை ஒருங்கிணைப்பை வளர்ப்பது, இலக்கு தொடர்பான புதிய மாற்றங்களில் நீங்கள் திறம்பட செயற்படுவதற்கு வழிவகுக்கும். 

  • குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பார்க்கும் போதும் பொருளொன்றினை தெளிவாக அவதானிக்கும் திறன். (Visual Clarity – See clear details from a distance) 

தெளிவாகப் பார்க்க முடியாத இயலாமை, நிச்சயமாக விளைாட்டினை ஆட விரும்பும் யாருக்கும் மிகப் பெரிய சவாலாக காணப்படுகின்றது. ஆனால் தெளிவாக அவதானிக்கும் திறனைப் பொறுத்தவரை, 20-20 என்னும் கூர்மையான பார்வை கொண்டவர்களும் சரியான முறையில் தங்களை வளப்படுத்தாது போயின் விளையாட்டில் சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலைமை காணப்படுகின்றது. 

நாம் பார்ப்பவற்றின் விரைவான  நிழல்படங்களை நம் மூளை பெற்றுக்கொள்கின்ற விபரங்களின் அடிப்படையில் உருவாக்குகிறது. இதில் நிறம் அல்லது வடிவத்தில் உள்ள வேறுபாடுகள் முக்கிய இடத்தினைப் பெறுவதோடு, எங்கள் இலக்குகளும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.  

நீங்கள் கண்களால் பார்க்கின்ற போது விடயங்களினை சரியான முறையில் அவதானிக்கும் ஆற்றல் ஒரு பந்து வீச்சாளராக உங்கள் செயற்திறனில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் பந்துவீசும் இடத்தில் இருந்து துடுப்பாட்டவீரரின் பலவீனத்தினை உங்களுக்கு பார்க்க முடியுமாயின் அந்த இடமே பந்துவீச்சின் போது நீங்கள் துடுப்பாட்ட வீரருக்கு சவால் கொடுக்க வேண்டிய இடமாக அமையும். 

  • அழுத்தங்களின் போது திருத்தமான தீர்மானம் எடுக்கும் திறன் (Go/No go – Make accurate decisions to react in pressure situations)

நீங்கள் அழுத்தத்தினை உணரும் போது உங்களுக்கு முன்னால் இருக்கும் சிறிய மேடும் ஒரு மலை போலத் தோன்ற முடியும். கண்-கை ஒருங்கிணைப்பு அல்லது தூரத்தில் இருக்கும் பொருளொன்றினை தெளிவாக அவதானிக்கும் திறன் என்பன அழுத்தமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் வேறு வகையான சிக்கல் நிலையொன்றினை அடைந்திருக்கும்.  

ஒரு பந்துவீச்சாளராக இருப்பதற்கு நீங்கள் அழுத்தமான சந்தர்ப்பங்களில் சரியான முடிவு ஒன்றினை எடுக்க வேண்டியது அத்தியவசியமான ஒன்றாக இருக்கின்றது.

எனவே, அழுத்தமான சந்தர்ப்பங்களில் விடயங்களை அழுத்தமின்றி கையாள்வதும், கண்களால் பார்க்கும் விடயங்களில் இருந்து சரியான முடிவு ஒன்றினை எடுப்பதும் எல்லாப் பந்துவீச்சாளர்களுக்கும் பிரதானமாக இருக்கின்றது.   

எனவே, அழுத்தமான தருணங்களில் சரியான முடிவு ஒன்றினை எடுக்கும் திறனினை வளர்த்துக்கொள்வதும் மேற்கொள்வதும் அழுத்தமான தருணங்களில் உங்கள் கண்களை வைத்து சரியான முடிவுகளை எடுக்க உதவும். 

  • வெவ்வேறு ஒளி நிலைமைகளில் பொருட்களை வேறு பிரித்து அவதானிக்கும் திறன் (Contrast sensitivity – Judge differences in contrast)

கிரிக்கெட் என்பது பல மணிநேரங்கள் மற்றும் பல நாட்கள் கூட நீடிக்கும் ஒரு விளையாட்டு. எனவே, இதன் போது நீங்கள் வெவ்வேறு ஒளி நிலைமைகளில் விளையாட வேண்டி இருக்கும். அதாவது நீங்கள் இந்த விளையாட்டு காலை, மாலை அல்லது மின்சார விளக்குகளுடனான இரவு என வெவ்வேறு வகையான ஒளி நிலைமைகளில் விளையாடப்பட்ட போதும் எல்லா நிலைகளிலும் உங்கள் திறமையினை சமமாக வெளிப்படுத்த வேண்டும்.

மாறுபட்ட நிலைமகளில், அதாவது வேறுபட்ட ஒளி நிலைமைகளில் நீங்கள் சிறப்பாக செயற்படுவது உங்கள் கண்கள் நிலைமகளுக்கு ஏற்றாற்போல் இயற்கையான முறையில் செயற்படுவதனை உறுதி செய்யும். 

  • வெவ்வேறு நிலைமைகளில் பொருளின் தூரத்தினையும், அமைவினையும் சரியாக கணிக்கும் திறன் (Depth perception – Judge depth information at different distances)

வெவ்வேறு நிலைமைகளில் பொருளின் தூரத்தினையும், அமைவினையும் சரியாக கணிக்கும் திறனும் பந்துவீச்சாளர் ஒருவர் மேம்படுத்த வேண்டிய பார்வைத்திறன்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இதேநேரம், மைதானத்தின் நீளமானது பந்துவீச்சாளர் ஒருவரின் பார்வை எந்தளவிற்கு ஆழமாக இருக்க வேண்டும் என்பதனைக் காட்டுகின்றது. இலகுவான முறையில் சொல்லப்போனால் உங்களுக்கு சரியான பந்தின் நிலைகளை கணிக்க முடியாது போயின் நீங்கள் ஓட்டங்களை விட்டுக்கொடுக்கும் நிலையொன்றுக்கு செல்கின்றீர்கள் என்று அர்த்தம்.

எனவே, இந்த பார்வைத் திறனை அதிகரிப்பது உங்கள் கண்கள் – கைகள் இடையிலான தொடர்பினை வினைத்திறனாக மேற்கொள்ள உதவுவதோடு பந்துவீச்சாளராக நீங்கள் Line & Length இணை திருத்தமாக பேணவும் பயனுள்ளதாக இருக்கும். 

  • Sports Vision எவ்வாறு பந்துவீச்சாளர்களுக்கு உதவி செய்கின்றது??

மேலே குறிப்பிட்ட பார்வைத்திறன்களை  பந்துவீச்சாளர்களுக்கு அதிகரிப்பதற்கான உதவி Vision Care இன் Sports Vision பிரிவில் வழங்கப்படுகின்றது. இங்கே உயர்தர தொழில்நுட்ப முறைகளான Senaptec Strobe Eyewear மற்றும் VR (Virtual Reality)  போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. 

VR தொழில்நுட்ப முறையில் செயற்கையான ஒரு விளையாட்டு நிலைமை உருவாக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படுகின்றது. இப்போது கொவிட்-19 வைரஸ் அச்ச நிலை காரணமாக மைதானம் போன்ற திறந்த வெளிகளில் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாதவர்களுக்கும் VR தொழில்நுட்ப முறையின் மூலம் பயன் கிடைக்கின்றது.

Senaptec Strobe Eyewear தொழில்நுட்ப முறையில் நாம் பார்க்க வேண்டிய விடயங்கள் கடினமாக்கப்படுவதன் மூலம் மூளை பார்வைத்தகவல்களை விரைவாக செயன்முறைக்கு உட்படுத்தும் ஆற்றல் அதிகரிக்கப்படுவதோடு, விரைவான முறையில் துலங்கல்களை வெளிக்காட்டும் திறனும் விருத்தி செய்யப்படுகின்றது. அதோடு, இதில் கண்-கை ஒருங்கிணைப்பு, Visual Memory, நினைவின் ஸ்திரத்தன்மை என்பனவும் அதிகரிக்கப்படுகின்றன. இது மாத்திரமின்றி பந்துவீச்சாளர் ஒருவருக்கு தேவையாக இருக்கும் பார்வையின் தெளிவுத்தன்மை (Dynamic Visual Clarity) போன்ற விடயங்களினை, அதற்குரிய சூழலிலேயே  அதிகரிக்க Senaptec Strobe Eyewear தொழில்நுட்ப முறை உதவியாக இருக்கும்.   

அதோடு, இங்கே Sport Vision பிரிவில் வழங்கப்படும் பயிற்சிகள் கொழும்பில் பார்வைத்திறன் பயிற்சிகளுக்கே விஷேடமாக அமைந்திருக்கும் நிலையத்தினை தவிர்த்து வீடுகளில் கூட செய்து கொள்ள முடியுமாக இருப்பது பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். 

எதிர்வரும் வாரங்களில் நாம் கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ் மற்றும் Gaming போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்கள் தங்களது பார்வைத்திறனை Vision Care நிறுவனத்தின் Sports Vision மூலம் எப்படி அதிகரிக்க முடியும் என்பதனைப் பார்ப்போம். 

Sports Vision தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமா? +94 76 697 628 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள் அல்லது கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். உங்களுடன் Vision Care நிறுவனத்தின் Sports Vision பிரிவு தொடர்பை ஏற்படுத்தும்.