நடைபெற்று முடிந்த 5ஆவது ஆபிரிக்க கால்பந்து கிண்ணத்துக்கான தொடரில் எகிப்து அணியுடனான இறுதிப் போட்டியில் வின்சென்ட் அபுபகரின் இறுதி நிமிட கோலின் மூலம் கமரூன் அணி 2-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டி, கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியில் முதல் பாதி நேரத்தின் போது எகிப்து அணியின் நடுக்கள வீரர் முகமட் எல்நேனி மூலம் பெற்றுக்கொண்ட கோலினால் அவ்வணி முன்னிலை வகித்திருந்தது.
லியோனல் மெஸ்ஸிசியின் சாதனையுடன் பில்பாவோ அணியை வெற்றிகொண்ட பார்சிலோனா
2015/16ஆம் ஆண்டுக்கான லா லிகா சம்பியனான பார்சிலோனா கால்பந்து கழக அணி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில்..
தோல்வியடையும் நிலையில் காணப்பட்ட கமரூன் அணி சார்பாக, நிக்கோலஸ் கோலு இரண்டாம் பாதியில் கோலொன்றினை அடித்து போட்டியை சமநிலைப் படுத்தியதுடன், கமரூன் அணிக்கு புத்துணர்வையும் அளித்தார். அதன் பின்னர் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடிய நிலையில் இரு அணிகளுக்கும் கிடைக்கப் பெற்ற வாய்ப்புக்கள் அதிகளவான அழுத்தத்தினால் வீணடிக்கப்பட்டன.
எனினும், போட்டி முடிவடைய சில நிமிடங்களே எஞ்சிய நிலையில், எகிப்தின் பின்கள தடுப்பு வீரர் விட்ட சிறு தவறினை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட வின்சென்ட் அபுபகர் அணிக்கான இரண்டாவது கோலையும் பெற்று, எகிப்து அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
கமரூன் அணி, இறுதியாக 2002ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட சம்பியன் கிண்ணத்தைத் தொடர்ந்து நீண்ட ஒரு இடைவெளியின் பின்னர் பெறும் சம்பியன் கிண்ணமாக இது உள்ளது. அதேநேரம், எகிப்து அணி கடந்த 2010ஆம் ஆண்டில் ஆபிரிக்க கிண்ணத்தில் சம்பியன் கிண்ணம் வென்றமை குறிப்பிடத்தக்கது.