தென்னாபிரிக்க அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் கெமரூன் கிரீன் நீக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகின்றது. இந்தப்போட்டியில் கெமரூன் கிரீன் விளையாடி வருகின்றார்.
இலங்கை தொடருக்கான இந்தியா குழாம் அறிவிப்பு!
நடைபெற்றுவரும் இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் என்ரிச் நோக்கிய வீசிய பந்து கிரிஸ் கிரீனின் வலது ஆள்காட்டி விரலில் தாக்கியிருந்தது. இதனால் ஆள்காட்டி விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே நடைபெற்றுவரும் இந்தப்போட்டியில் அவரால் பந்துவீச முடியாது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவித்துள்ளதுடன், தேவை ஏற்படின் அவர் துடுப்பெடுத்தாடுவதற்கு தயாராக உள்ளார் என குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் இவரால் ஜனவரி 4ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது எனவும், அவருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி இந்திய தொடருக்காக தயாராகுவதற்காக பிக் பேஷ் லீக்கிலும் இவர் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரஸ் கிரீன் பந்துவீசாமையானது இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியாவுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதல் இன்னிங்ஸில் கிரிஸ் கிரீன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சு பிரதியை (5/17) பதிவுசெய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<