பெண்கள் மீது தலிபான்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டின் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியுடன் அவுஸ்திரேலியா ஆடவிருந்த T20I தொடரினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை (CA) காலவரையின்றி ஒத்திவைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் வனிந்து ஹஸரங்க!
அவுஸ்திரேலிய – ஆப்கான் அணிகள் இடையில் இந்த ஆண்டின் ஒகஸ்ட் மாதம் 3 போட்டிகள் கொண்ட T20I தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த இந்த T20I தொடர் தற்போது பெண்கள் மீது தலிபான் அமைப்பு வெளிப்படுத்தி வருகின்ற நிலைப்பாட்டினை காரணமாகக் காட்டி ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பில் மேலும் அறியக் கிடைத்த விடயங்களுக்கு அமைய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஆப்கானில் தற்போது ஆட்சி அதிகாரத்தில் காணப்படும் தலிபான் அமைப்பானது பெண்கள் மீதான அவர்களது நிலைப்பாட்டில் எந்த முன்னேற்றங்களையும் காண்பிக்கவில்லை எனக் குறிப்பிட்டு T20I தொடரினை ஒத்தி வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே தலிபான்களை காரணமாகக் காட்டி ஆப்கான் – அவுஸ்திரேலிய அணிகள் இடையில் நடைபெறவிருந்த வரலாற்றுபூர்வமிக்க டெஸ்ட் போட்டியினை அவுஸ்திரேலியா இரத்துச் செய்ததோடு, கடந்த ஆண்டு இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறவிருந்த ஒருநாள் தொடரில் இருந்தும் அவுஸ்திரேலியா விலகியிருந்தது. விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையிலையே தற்போது T20I தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.
அதேவேளை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் நிலைமைகள் சீராகி பெண்களுக்கு ஆப்கானிஸ்தானில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் போது ஆப்கான் அணியுடன் மீண்டும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் ஆட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
21ஆவது வடக்கின் சமர் ஒருநாள் போட்டியினைக் கைப்பற்றிய யாழ். மத்தி
இதேவேளை ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவம் பெற்ற நாடுகளில் மகளிருக்கான கிரிக்கெட் அணியொன்றை கொண்டிருக்காத ஒரே நாடாக ஆப்கானிஸ்தான் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<