இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஜோஸ் பட்லர், அவுஸ்திரேலிய அணியுடன் இங்கிலாந்து விளையாடவுள்ள மூன்றாவது T20i போட்டியில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>> இலகு வெற்றியுடன் T20 தொடர் இங்கிலாந்து வசம்
இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் இடையில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடர் ஒன்று நடைபெற்றுவருகின்றது. இந்த தொடரில் தற்போது இரண்டு போட்டிகள் நிறைவடைந்திருக்க, ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்று முடிந்த இரண்டாவது T20 போட்டியில் அரைச்சதம் ஒன்றினை விளாசிய ஜோஸ் பட்லர் தனது தரப்பின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார். இதேநேரம், கடந்த வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்ற T20 தொடரின் முதல் போட்டியிலும் பட்லர் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில், அவுஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகள் பங்குபெறும் T20 தொடரின் கடைசிப் போட்டியிலும் ஜோஸ் பட்லரின் துடுப்பாட்டம் எதிர்பார்க்கப்பட்டிருந்து. எனினும், கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளினை மீறி உயிர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறிய ஜோஸ் பட்லர் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் பங்குபெறும் T20 தொடரின் மூன்றாவது போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை இழந்திருக்கின்றார்.
மூன்றாவது T20 போட்டியில் இருந்து ஜோஸ் பட்லர் வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தினை இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) இவ்வாறு சுட்டிக் காட்டியிருந்து.
>> IPL தொடரிலிருந்து விலகும் ஹர்பஜன் சிங்
”இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டவீரர் ஜோஸ் பட்லர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான (இங்கிலாந்து) அணியின் வெற்றிக்குப் பின்னர் நேற்று மாலை உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக சென்றிருந்தார்.”
தற்போது அணியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஜோஸ் பட்லர், இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் இடையில் நடைபெற்று வருகின்ற T20 தொடர் நிறைவடைந்த பின்னர் செப்டம்பர் 11ஆம் திகதி தொடக்கம் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<