வீரரொருவரின் உணவினால் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி

557

வீரர்களின் ஓய்வறையிலிருந்து தீயணைப்பு சமிக்ஞைகள் எழுப்பப்பட்டதன் காரணமாக அவுஸ்திரேலியாவின் உள்ளூர் அணிகளான நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகியவற்றுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி புதன்கிழமை (நவம்பர் 15) சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டது.

பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வந்த செபில்ட் கிண்ண (முதல்தர) கிரிக்கெட் தொடரின் இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது.

நியூ சவூத் வேல்ஸ் அணிக்கு போட்டியில் வெற்றி பெற 18 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்த போது அவுஸ்திரேலிய அணியின் சுழல் வீரர் நேதன் லயனின் அறையிலிருந்து தீ ஏற்பட்டதற்கான அபாய சமிக்ஞைகள் வந்திருந்தன. இதனால் போட்டி நிறுத்தப்பட்டதுடன் தேநீர் இடைவேளையும்  எடுக்கப்பட்டது. இத்தருணத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை கருதி வீரர்களும் தங்களது ஓய்வறைகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

நேதன் லயன், பாண் மூலம் தனக்கான தேநீர் சிற்றுண்டியை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே தவறுதலாக தீயணைப்பு சமிக்ஞை ஒலித்ததாக பின்னர் ஒப்புக் கொண்டிருந்தார்.

>> ரமித் ரம்புக்வெல்லவின் அதிரடி ஆட்டத்தினால் காலிறுதிக்கு நுழைந்த மாஸ் ஹோல்டிங்ஸ் <<

சம்பவத்தின் பிறகு அவுஸ்திரேலிய அணியின் இணைத்யளத்துக்கு கருத்து தெரிவித்திருந்த நேதன் லயன் “முதலில் (சிற்றுண்டி  இயந்திரத்தில் இருந்து சிற்றுண்டி) மிகவும் விரைவாக வெளியே வந்தது. இதனால் சற்று மகிழ்ச்சியை இழந்த, நான் அந்த சிற்றுண்டியை மீண்டும் இயந்திரத்தில் அப்படியே அதைப் போட்டுவிட்டு கிரிக்கெட் போட்டியைப் பார்க்கச் சென்றுவிட்டேன்” எனக் குறிப்பிட்டார்.

இன்னும். “எல்லாவற்றுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கின்றது” என மேலும் கருத்து தெரிவித்த லயன் அறையை விட்டு வெளியேறியமைக்கான காரணத்தையும் கூறியிருந்தார்.

“நான் நீண்ட நேரம் ஓய்வறையில் இருந்தது எனக்கு சலிப்பை உண்டாக்கியது.“

சமிக்ஞைகளை அடுத்து மைதானத்துக்குள் இரண்டு தீயணைப்பு வண்டிகள் வந்திருந்தன. இதனை நகைச்சுவையாக பார்த்த லயன் “ஸ்டீவ் ஸ்மித் இதற்கான கட்டணங்களை (தீயணைப்பு சேவைக்கான) செலுத்தப் போவதாக ஏற்கனவே என்னிடம் கூறியிருக்கின்றார்” எனக் கூறினார்.

இந்த விநோத சம்பவம் முடிவடைந்து போட்டி மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கேர்டிஸ் பட்டின்சன் மற்றும் டேனியல் ஹேக்ஸ் ஆகியோர் தமது இணைப்பாட்டத்துடன் நியூ சவுத் வேல்ஸ் அணியினர் 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற உதவி செய்திருந்தனர்.