இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான புரூஸ் யார்ட்லி புற்று நோயினுடனான நீண்ட கால போராட்டத்தின் பின்னர் தனது 71ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான யார்ட்லி இலங்கை அணி 1996ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர், இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக மாறியிருந்தார்.
மைதானத்தில் முரண்பட்ட ரபாடா, சர்மா மற்றும் வொட்சன்
ஐ.பி.எல். தொடரில் இம்முறை ஒவ்வொரு நாளும் சுவாரஷ்ய விடயங்கள் நடந்துக்கொண்டே இருக்கின்றன….
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட போது யார்ட்லி, தனது இடது கண்ணின் அருகாமையில் புற்றுநோய் அபாயம் ஒன்றினை எதிர்கொண்ட போதிலும் பின்னர் குறித்த புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பியிருந்தார்.
எனினும், 2016ஆம் ஆண்டில் மீண்டும் புற்றுநோய்க்கு ஆளாகிய அவர் அதற்கு தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்தார். குறித்த சிகிச்சைகள் ஏதும் பலனளிக்காத நிலையில் அவர் புதன்கிழமை (27) காலை உயிரிழந்திருக்கின்றார்.
புரூஸ் யார்ட்லி, அவுஸ்திரேலிய அணிக்காக 1978ஆம் ஆண்டு தொடக்கம் 1983ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மொத்தமாக 33 டெஸ்ட் போட்டிகளிலும், 7 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தனது கிரிக்கெட் வாழ்க்கையினை ஒரு வேகப்பந்து வீச்சாளராகவே ஆரம்பித்த யார்ட்லி பின்னர் ஒரு சுழல் பந்துவீச்சாளராக மாறினார். தான் கிரிக்கெட் விளையாடிய காலப்பகுதியின் சுழல் ஜாம்பவானாக இருக்கும் யார்ட்லி, தான் பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 126 விக்கெட்டுகளை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது
அதேநேரம் கலி (Gully) திசையில் களத்தடுப்பில் ஈடுபடும் யார்ட்லி, இதுவரையில் கிரிக்கெட் விளையாட்டு இனம்கண்ட சிறந்த களத்தடுப்பாளராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதோடு, பின்வரிசை துடுப்பாட்ட வீரராகவும் செயற்பட கூடிய யார்ட்லி தனது கிரிக்கெட் வாழ்நாளில் 4 அரைச்சதங்களை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக, கிரிக்கெட் விளையாட்டின் அனைத்து பகுதிகளிலும் திறமை காட்டிய யார்ட்லி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் ஆர்வம் காட்டினார். மொத்தமாக 105 முதல்தர போட்டிகளில் ஆடியுள்ள யார்ட்லி இதுவரையில் 334 விக்கெட்டுகள் வரையில் சாய்த்திருக்கின்றார்.
IPL இல் ஆட மாலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் அனுமதி
தற்பொழுது நடைபெற்றுவரும் இந்தியன்…..
முதல்தரப் போட்டிகளை அடுத்து இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக மாறிய யார்ட்லி இலங்கை வீரரான முத்தையா முரளிதரன் உலகில் ஒரு தலைசிறந்த பந்துவீச்சாளராக மாற முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
அந்தவகையில், யார்ட்லி இலங்கை அணிக்கான தனது பயிற்சிக் காலத்தின் போது முரளிதரனுக்கு தூஸ்ரா பந்துகளை போடுவதற்கான அறிவுறுத்தல்களை கொடுத்ததோடு, முரளிதரன் பந்தினை எறிகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்த சமயத்திலும் அவருக்கு பக்கபலமாக காணப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் மட்டுமல்லாது புரூஸ் யார்ட்லி தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் தனது வாழ்க்கை காலத்தில் பணி புரிந்திருக்கின்றமை அவர் கிரிக்கெட்டில் மிகப் பெரிய பங்களிப்பு வழங்கிய ஒருவர் என்பதற்கு சான்றாகவும் உள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<