இலங்கையில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கையின் முதல்தர விளையாட்டு தொலைக்காட்சி அலைவரிசையான ThePapare ஒளிபரப்பு செய்யவுள்ளது.
இலங்கை, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடருக்கான அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நடைபெறவுள்ளதுடன், அனைத்துப் போட்டிகளும் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
- இலங்கை முக்கோணத் தொடருக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு
- இலங்கை – பங்களாதேஷ் இளையோர் தொடருக்கான போட்டி அட்டவணையில் மாற்றம்!
- பங்களாதேஷ் உடன் ஆடும் இலங்கை U19 கிரிக்கெட் குழாம் அறிவிப்பு
இந்தப் போட்டித் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த நிலையில், இலங்கையில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பெண்கள் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு தளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒளிபரப்பு தளங்கள்
- PayTv: ThePapare 2 டயலாக் தொலைக்காட்சி (63ஆவது அலைவரிசை)
- Digital: com (Website) | ThePapare.com (Facebook) | Dialog VIUApp
- YouTube: Sri Lanka Cricket
இந்தியா
- Tv & Digital: Sporta Technologies Private Limited –FanCode
Global
- YouTube: Sri Lanka Cricket
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<