கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளராக மெக்கல்லம் நியமனம்

197
brendom

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய உதவிப் பயிற்சியாளராகவும், கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி ஆட்டக்காரருமான பிரெண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஈஎஸ்பிஎன் (ESPN) செய்தி வெளியிட்டுள்ளன. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெக் கல்கிஸ், மற்றும் உதவிப் பயிற்சியாளர் சைமன் கேடிச் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன் தத்தமது பதவிகளில் இருந்து விலகிக் கொண்டனர். இந்த நிலையில் தான் பிரெண்டன் மெக்கல்லம் அந்த அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரெண்டன் மெக்கல்லம் ஓய்வு பெற்றாலும் இன்னமும் வீரராக ஒருசில வெளிநாட்டு டி-20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகின்றார்

ஆனால் தற்போது கனடாவில் நடைபெற்று வருகின்ற குளோபல் டி20 தொடரில் டொரன்டோ நெஷனெல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், கடந்த 5ஆம் திகதி அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும்  ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதேநேரம், தனது ஓய்வு குறித்து இன்ஸ்டெர்கிராமில் பதிவொன்றை வெளியிட்டிருந்த அவர், எனது அடுத்த அத்தியாயம் ஊடகமும், பயிற்சியாளர் ஆகிய இரண்டிலும் இருக்கும் எனவும், அது தனக்கு சவாலைக் கொடுக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ப்ரெண்டன் மெக்கலம்

கிரிக்கெட் விளையாட்டில் டி20 போட்டி மற்றும் களத்தடுப்பிற்கென….

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐந்து பருவங்களில் விளையாடியுள்ள பிரெண்டன் மெக்கல்லம், 2009இல் அந்த அணியின் தலைவராகவும் செயற்பட்டார். இந்நிலையில் அவர் கொல்கத்தா அணியின் உதவிப் பயிற்சியாளராக அவதாரம் எடுக்கவுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2008இல் மெக்கல்லம் விளையாடிய போது 158 ஓட்டங்களை எடுத்து அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்;டார். இது தொடக்க போட்டியாகவும் அமைந்ததால் .பி.எல் கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய தொடக்கமாக இது அமைந்தது.

எதுஎவ்வாறாயினும், அடுத்த வருடம் நடைபெறவுள்ள .பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் யார் என்பது குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை

இந்த நிலையில், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேநேரம், இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அங்குரார்ப்பண யூரோ ஸ்லாம் டி-20 தொடரில் கிளாஸ்கோ ஜியென்ட்ஸ் அணிக்காக ஒரு தன்னார்வ வீரராக விளையாடவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க